நீங்கள் சிறுபிள்ளையாக இருந்தபோது உங்களுடைய அப்பா அம்மாவிடம், “குழந்தை எப்படிப் பிறக்கிறது” என்று கேட்டு அவர்களை வியப்படைய வைத்திருக்கிறீர்களா? அப்போது, அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? உங்களுடைய வயதை மனதில் வைத்து அல்லது அவர்களுடைய சுபாவத்தைப் பொறுத்து, அவர்கள் ஒருவேளை பதில் சொல்லாமல் மழுப்பியிருக்கலாம்; அல்லது, அப்போதைக்கு ஏதோவொரு பதிலைச் சொல்லி சமாளித்திருக்கலாம், அல்லது ஏதாவது கதை சொல்லியிருக்கலாம். ஆனால், அதெல்லாம் பொய் என்று பிற்பாடு உங்களுக்குத் தெரிய வந்திருக்கலாம். இருந்தாலும், குழந்தைகள் வளர்ந்து, கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பு என்றாவது ஒருநாள் குழந்தை பிறப்பைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
குழந்தை எப்படிப் பிறக்கிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல பெற்றோர் பலர் தயங்குவதைப் போலவே, ‘உயிர் எப்படி வந்தது?’ என்ற மிக அடிப்படை கேள்விக்குப் பதிலளிக்க விஞ்ஞானிகள் சிலரும் தயங்குவதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கேள்விக்குத் தகுந்த பதில் முக்கியம், ஏனென்றால் உயிரைப் பற்றிய ஒருவருடைய கண்ணோட்டத்தையே அது மாற்றலாம். அப்படியானால், உயிர் எப்படித் தோன்றியது?
விஞ்ஞானிகள் பலர் என்னசொல்கிறார்கள்? கோடானுகோடிஆண்டுகளுக்கு முன்பு, அலைஏற்றத்தால் நிரம்பி வழிந்த பழங்காலகுளத்தின் ஓரத்தில், அல்லது கடலின்ஆழத்தில், உயிர் தோன்றியதெனபரிணாமத்தை நம்புகிற பலர்கூறுகிறார்கள். இதுபோன்ற ஓர்இடத்தில், நீர்க்குமிழிகள் வடிவில்ரசாயனங்கள் தானாகவேஒன்றிணைந்து சிக்கலானமூலக்கூறுகளை உண்டாக்கின, பின்புஅவை பன்மடங்கில் பெருகின என்றுஅவர்கள் நினைக்கிறார்கள். இந்தச்“சாதாரண” மூல செல்களிலிருந்தே(ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டசெல்களிலிருந்தே) பூமியிலுள்ளஅனைத்து உயிரினங்களும்தற்செயலாய்த் தோன்றியதாகஅவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால், பரிணாமத்தை நம்புகிறவேறுசில பிரபல விஞ்ஞானிகளோஇதை ஒத்துக்கொள்வதில்லை. முதல்செல்களோ அவற்றின் முக்கியகூட்டுப்பொருட்களோவிண்வெளியிலிருந்து பூமிக்குவந்திருக்கலாம் என அவர்கள்ஊகிக்கிறார்கள். ஏன்? எவ்வளவுதான்முயற்சி செய்தாலும் உயிரற்றமூலக்கூறுகளிலிருந்து உயிர்தற்செயலாய் உருவாக முடியும்என்பதை அவர்களால் நிரூபிக்கமுடியவில்லை. உயிர் எப்படித்தோன்றியது என்பதன் பேரில் நிலவும்இந்தக் குழப்பத்தை 2008-ல்உயிரியல் பேராசிரியர்அலெக்ஸான்டிரே மெய்னஸ்எடுத்துக்காட்டினார். கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக“செய்யப்பட்ட பரிசோதனைகளில்,மூலக்கூறு கலவையிலிருந்துபூமியில் உயிர் தானாகவேதோன்றியது என்ற ஊகத்தைநிரூபிப்பதற்கு எந்த அத்தாட்சியும்கிடைக்கவில்லை; அறிவியலில்ஏற்பட்டுள்ள வியத்தகுவளர்ச்சியும்கூட இந்த முடிவுக்குவழிநடத்துவதில்லை”1 என அந்தப்பேராசிரியர் குறிப்பிட்டார்.
அத்தாட்சி என்ன காட்டுகிறது?குழந்தை எப்படிப் பிறக்கிறது என்றகேள்விக்கான பதில் சர்ச்சைக்குஇடமின்றி தெளிவாகநிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவேஇருக்கும் ஓர் உயிரிலிருந்துதான்மற்றொரு உயிர் தோன்ற முடியும்.அப்படியிருக்கும்போது,கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு மட்டும் இந்த அடிப்படை விதிமாறியிருக்குமா? உயிரற்றரசாயனங்களிலிருந்து உயிர்தானாகவே தோன்ற முடியுமா?அப்படி நிகழ்வதற்கு ஏதாவது வாய்ப்புஇருக்கிறதா?
ஒரு செல் உயிர்வாழ குறைந்ததுமூன்று சிக்கலான மூலக்கூறுகள்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,அதாவது DNA (டிஆக்ஸி ரைபோநியூக்ளிக் அமிலம்), RNA (ரைபோநியூக்ளிக் அமிலம்) மற்றும்புரோட்டீன்கள் (புரதங்கள்)ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,என்பதை ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்திருக்கிறார்கள். உயிரற்றரசாயன கலவையிலிருந்து முழுவளர்ச்சிபெற்ற உயிர்ச் செல்தற்செயலாய்த் தோன்றியது எனஇன்றுள்ள அநேக விஞ்ஞானிகள்சொல்ல மாட்டார்கள்.அப்படியென்றால், RNA அல்லதுபுரோட்டீன்கள் தற்செயலாகத்தோன்றுவதற்கு ஏதாவது வாய்ப்புஇருக்கிறதா?*
உயிர் தற்செயலாகத்தோன்றியிருக்கலாம் என்று அநேகவிஞ்ஞானிகள் நம்புவதற்கு காரணம்1953-ல் செய்யப்பட்ட ஒருசோதனையே. அந்த வருடத்தில்ஸ்டான்லி எல். மில்லர் சிலஅமினோ அமிலங்களை, அதாவதுபுரோட்டீன்களை உருவாக்குவதற்குத்தேவையான அடிப்படை ரசாயனக்கூறுகளை, உண்டாக்கினார்.பழங்காலத்தில் பூமியின்விண்வெளியில் இருந்ததாகஊகிக்கப்பட்ட வாயுக் கலவைக்குள்மின்சாரத்தைச் செலுத்தி இவற்றைஉண்டாக்கினார். அதன் பிறகுஅமினோ அமிலங்கள் விண்கல்ஒன்றில் இருப்பதாகவும்கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக்கண்டுபிடிப்புகளை வைத்து உயிரின்எல்லா அடிப்படைக் கூறுகளும்சுலபமாயும் தற்செயலாயும்வந்திருக்கும் என்று சொல்லிவிடமுடியுமா?
நியு யார்க் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ராபர்ட் ஷப்பைரோ என்றஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர்கூறுவதாவது: “மில்லர் செய்ததைப்போன்ற பரிசோதனைகளின் மூலம்உயிரின் எல்லா அடிப்படைக்கூறுகளையும் உண்டாக்க முடியும்...அவை விண்கற்களிலும்இருக்கின்றன... என்று சிலஎழுத்தாளர்கள்நினைத்துக்கொண்டார்கள். ஆனால்,இது உண்மை இல்லை.”2*
இப்போது RNA மூலக்கூறைஎடுத்துக்கொள்ளுங்கள். அதுநியூக்ளியோடைடுகள் எனஅழைக்கப்படும் சிறுசிறுமூலக்கூறுகளால் ஆனது. இந்தநியூக்ளியோடைடு அமினோஅமிலத்திலிருந்து மாறுபட்ட ஒருமூலக்கூறு, அதேசமயத்தில்அதைவிட சற்றே சிக்கலானது. “எந்தவகை நியூக்ளியோடைடுகளும்மின்சாரத்தைச் செலுத்தியதன் மூலம்ஆய்வுக்கூடத்தில்உண்டாக்கப்பட்டதாகவோவிண்கற்களில் இருந்ததாகவோஇதுவரை அறிக்கைசெய்யப்படவில்லை”3 என்றுஷப்பைரோ சொல்கிறார்.* அதோடு,தன்னையே இரட்டிப்பாக்கும் RNAமூலக்கூறு அடிப்படை ரசாயனகூறுகள் நிறைந்த ஒருகுளத்திலிருந்து எதேச்சையாகஉண்டாவதற்கான வாய்ப்பு “வெகுவெகு அரிது; அப்படியே இந்தப்பிரபஞ்சத்தில் தப்பித்தவறிஉண்டானால்கூட அது ஏதோஅதிர்ஷ்டவசமானது என்றே சொல்லவேண்டும்”4 என்று ஷப்பைரோமேலும் கூறுகிறார்.
புரோட்டீன் மூலக்கூறுகளைப் பற்றிஎன்ன சொல்லலாம்? அமினோஅமிலங்களை மிகத் துல்லியமானவரிசைக் கிரமத்தில்ஒன்றிணைப்பதன் மூலம் புரோட்டீன்மூலக்கூறுகளை உண்டாக்க முடியும்;இதற்கு குறைந்தபட்சம் 50 அமினோஅமிலங்களிலிருந்து அதிகபட்சம்பல்லாயிரம் அமினோஅமிலங்கள்வரை தேவைப்படும். ஒரு“சாதாரண” செல்லில் உள்ள சராசரிபுரோட்டீனில் 200 அமினோஅமிலங்கள் உள்ளன. அத்தகையசெல்களில்கூட புரோட்டீன்கள்ஆயிரக்கணக்கான வகையில்இருக்கின்றன. 100 அமினோஅமிலங்களைக் கொண்ட ஒரேவொருபுரோட்டீன்கூட எதேச்சையாக இந்தப்பூமியில் உருவாவதற்கு கோடி...கோடி... வாய்ப்புகளில் ஒருவாய்ப்புக்கூட அரிதுதான்.
பரிணாமத்தை ஆதரிக்கிற ஹூபர்ட்பி. யாக்கி என்ற ஆராய்ச்சியாளர்இன்னும் ஒருபடி மேலே சென்றுஇவ்வாறு சொல்கிறார்:“‘முதன்முதலில் புரோட்டீன்உருவானது,’ பின்பு அதிலிருந்து உயிர்தோன்றியது என்று சொல்லவேமுடியாது.”5 ஏனென்றால்,புரோட்டீன்கள் உருவாவதற்கு RNAதேவை; அதேசமயத்தில் RNAஉருவாவதற்கு புரோட்டீன்கள் தேவை.அப்படியென்றால், புரோட்டீன்களும்RNA மூலக்கூறுகளும் ஒரே இடத்தில்,ஒரே சமயத்தில் தற்செயலாய்த்தோன்ற முடியுமா? அதுவும் அப்படிநடப்பதற்கு கொஞ்சம்கூட சாத்தியம்இல்லாதபோது அவ்வாறு தோன்றமுடியுமா? ஒருவேளை அப்படியேதோன்றியிருந்தாலும், அந்தமூலக்கூறுகள் ஒருங்கிணைந்துசெயல்பட்டு ஓர் உயிரியை உருவாக்கமுடியுமா? அதுவும் தன்னையேஇரட்டிப்பாக்குகிற... எதன்மீதும்சார்ந்திராமல் தானாகவே வாழ்கிற...ஓர் உயிரியை உருவாக்க முடியுமா?“இப்படித் தற்செயலாக நிகழ்வதற்கானவாய்ப்பு (அதாவது, புரோட்டீன்களும்RNA-வும் தானாகவே ஒருங்கிணைந்துசெயல்படுவதற்கான வாய்ப்பு) மிகமிகக் குறைவு” என ‘நாஸா’-வின்விண்ணுயிரியல் (Astrobiology)துறையைச் சேர்ந்த டாக்டர் கேரல்கிளெலன்டு சொல்கிறார்.* அவர்தொடர்ந்து சொல்வதாவது: “பூமியில்பழம்பெரும் காலத்தில் புரோட்டீன்கள்அல்லது RNA எப்படித் தானாகவேஉருவாயின என்பதைப்புரிந்துகொண்டால் போதும், அவைஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கும்விதத்தைக் குறித்து கவலைப்படவேண்டியதில்லை, அது எப்படியோதற்செயலாக நடந்திருக்கும் என்றுஆராய்ச்சியாளர்கள் பலர்நினைக்கிறார்கள்.” உயிரின் இந்தஅடிப்படைக் கூறுகள் தானாகவந்திருக்கலாம் என்ற தற்போதையகோட்பாடுகளைக் குறித்து கேரல்சொல்கிறார்: “இதெல்லாம் எப்படிநடந்தது என்பதற்கு அந்தக்கோட்பாடுகள் எதுவுமே திருப்தியானவிளக்கம் அளிக்கவில்லை.”6
இந்த உண்மைகள் ஏன் முக்கியம்?உயிர் தற்செயலாய்த் தோன்றியதெனநம்புகிற ஆராய்ச்சியாளர்கள்எதிர்ப்படும் சவாலைச் சற்றுஎண்ணிப்பாருங்கள். உயிர்ச்செல்களில் காணப்படும் அமினோஅமிலங்கள் சிலவற்றை அவர்கள்கண்டுபிடித்திருக்கிறார்கள்.கவனமாய்த் திட்டமிட்டுஒழுங்கமைப்புடன் செய்யப்பட்டபரிசோதனைகளிலிருந்துஅவற்றைவிட சிக்கலான மற்றமூலக்கூறுகளை அவர்கள்ஆய்வுக்கூடங்களில்உண்டாக்கியிருக்கிறார்கள்.இதேபோல், ஒரு “சாதாரண” செல்லைஉருவாக்குவதற்குத் தேவையானமற்றெல்லா பாகங்களையும்தயாரித்துவிடலாம் என அவர்கள்நம்புகிறார்கள். இவர்களுடையநிலைமையை பின்வரும்விஞ்ஞானிக்கு ஒப்பிடலாம்: இவர்இயற்கையில் கிடைக்கிறதனிமங்களை ஸ்டீல், பிளாஸ்டிக்,சிலிக்கான், வயர் போன்றபொருள்களாக மாற்றுகிறார்; பின்னர்அதை வைத்து ஒரு ரோபோட்டைஉண்டாக்குகிறார். பின்பு, அந்தரோபோட் தன்னைப் போலவே பலரோபோட்டுகளை உருவாக்கும்விதத்தில் அந்த விஞ்ஞானி அதைபுரோகிராம் செய்கிறார். அப்படிச்செய்வதன் மூலம் அவர் எதைநிரூபிக்கிறார்? புத்திக்கூர்மையுள்ளஒருவரால்தான் மலைக்கவைக்கும்ஓர் இயந்திரத்தை உருவாக்க முடியும்என்பதையே நிரூபிக்கிறார்!
அப்படியே ஒருவேளைவிஞ்ஞானிகள் ஒரு செல்லைஉண்டாக்கினால்கூட,உண்மையிலேயே அது ஒருசாதனையாகத்தான் இருக்கும்,ஆனால் அந்த செல் தற்செயலாய்த்தோன்ற முடியுமென அவர்களால்நிரூபிக்க முடியுமா? அவர்கள் எதைநிரூபிக்க வேண்டும் என்றுநினைக்கிறார்களோ அதற்குமுற்றிலும் நேர்மாறான ஒன்றையேநிரூபிப்பார்கள், அல்லவா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?உயிர் ஏற்கெனவே இருக்கும் ஓர்உயிரிலிருந்துதான் தோன்ற முடியும்என்பதையே இதுவரை கிடைத்துள்ளவிஞ்ஞானப்பூர்வ அத்தாட்சிகள்அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.“சாதாரண” செல்கூட உயிரற்றரசாயனங்களிலிருந்து தற்செயலாய்த்தோன்றியதென ஒருவர் நம்புவதற்குஅசாத்திய நம்பிக்கை வேண்டும்.
உண்மைகளை அலசிப்பார்த்தபின்பும், உயிரற்றரசாயனங்களிலிருந்து “சாதாரண”செல் தோன்றியது என்பதை நம்பநீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?இந்தக் கேள்விக்குப் பதில்சொல்வதற்கு முன்பு, செல்வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தைஉன்னிப்பாய் கவனியுங்கள். அப்படிஉன்னிப்பாய்ப் பார்க்கும்போது, உயிர்எங்கிருந்து தோன்றியது என்பதைக்குறித்து விஞ்ஞானிகள் சிலர்கற்பிக்கிற கோட்பாடுகள் நியாயமாகஇருக்கின்றனவா அல்லதுகுழந்தைகள் எப்படிப் பிறக்கிறார்கள்என்பதற்குப் பெற்றோர்கள் சிலர்சொல்கிற கதைகள் போல்இருக்கின்றனவா என்பதைப்புரிந்துகொள்வீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
DNA தானாகவே தோன்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றி “கட்டளைகள் எங்கிருந்து வந்தன?” என்ற 3-ஆம் பாகத்தில் சிந்திக்கப்படும்.
உயிர் படைக்கப்பட்டது என்று பேராசிரியர் ஷப்பைரோ நம்புவதில்லை. இதுவரை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஏதோவொரு விதத்தில் உயிர் தற்செயலாகத் தோன்றியது என்றே அவர் நம்புகிறார்.
2009-ல், இங்கிலாந்தில், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நியூக்ளியோடைடுகள் சிலவற்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியதாகத் தெரிவித்தார்கள். என்றாலும், ஷப்பைரோ என்ன சொல்கிறார் என்றால், “RNA-வின் உலகத்திற்குள் செல்ல நான் வகுத்திருக்கும் அளவுகோலை [அவர்களுடைய பரிசோதனை முறை] துளியும் எட்டுவதில்லை.”
உயிர் படைக்கப்பட்டது என்று டாக்டர் கிளெலன்டு நம்புவதில்லை. இதுவரை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஏதோவொரு விதத்தில் உயிர் தற்செயலாகத் தோன்றியது என்றே நம்புகிறார்.
[பக்கம் 7-ன் பெட்டி]
உண்மைகளும் கேள்விகளும்
▪ உண்மை: உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தற்செயலாய்த் தோன்ற முடியாது என்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.
கேள்வி: முதல் செல் உயிரற்றரசாயனங்களிலிருந்து தற்செயலாய்த்தோன்றியது என்பதற்கு என்னஅறிவியல் ஆதாரம் உள்ளது?
▪ உண்மை: ஆதிகாலத்தில் பூமியில் நிலவியதாக நம்பப்படும் சுற்றுச்சூழலைப் பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அப்படிச் செய்யப்பட்ட பரிசோதனையில், உயிரினங்களில் காணப்படும் சில மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் சிலர் தயாரித்திருக்கிறார்கள்.
கேள்வி: இந்தப் பரிசோதனையில்பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள்பூமியின் ஆதிகால சூழலையும்,உண்டாக்கப்பட்ட மூலக்கூறுகள்உயிரின் அடிப்படைக் கூறுகளையும்குறிக்கிறதென்றால், இந்தப்பரிசோதனையைச் செய்தவிஞ்ஞானியை யாருக்கு அல்லதுஎதற்கு ஒப்பிடலாம்? அந்தவிஞ்ஞானியைக் குருட்டுத்தனமானஇயற்கைக்கு ஒப்பிடலாமா அல்லதுபுத்திக்கூர்மையுள்ள ஒருவருக்குஒப்பிடலாமா?
▪ உண்மை: செல் உயிர்வாழ புரோட்டீனும் RNA மூலக்கூறுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். RNA தற்செயலாய்த் தோன்றுவதற்குத் துளிகூட வாய்ப்பே இல்லை என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். ஒரேவொரு புரோட்டீன்கூட தற்செயலாய்த் தோன்றியிருக்க முடியாது. RNA-வும் புரோட்டீன்களும் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் தற்செயலாய்த் தோன்றுவதற்கும், அவை ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் அணு அளவுகூட சாத்தியமில்லை.
கேள்வி: ஒரு செல்லுக்குள்ஒருங்கிணைந்து செயல்படும்கோடானுகோடி சிக்கலான பாகங்கள்தற்செயலாய்த் தோன்றியதெனநம்புவது நியாயமாக இருக்கிறதாஅல்லது ஒரு செல்புத்திக்கூர்மையுள்ள ஒருவரால்உண்டாக்கப்பட்டது என்பதை நம்புவதுநியாயமாக இருக்கிறதா?
[பக்கம் 6-ன் படம்]
(For fully formatted text, see publication)
புரோட்டீன்கள் உருவாக RNA 1 தேவை, அதேசமயம் RNA உருவாவதற்கு புரோட்டீன்கள் 2 தேவை. அவற்றில் ஒன்றுகூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லாதபோது அவை இரண்டும் எப்படித் தற்செயலாக உருவாக முடியும்? ரைபோசோம்களை 3 பற்றி 2-ஆம் பாகம் அலசும்
ஓர் ஆய்வுக்கூடத்தில் சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க திறம்பட்ட ஒரு விஞ்ஞானி தேவை என்றால், செல்லிலுள்ள மிக மிகச் சிக்கலான மூலக்கூறுகள் மட்டும் தானாகத் தோன்றியிருக்க முடியுமா?
[பக்கம் 4-ன் படம்]
கருவுற்ற மனித உயிரணு, சுமார் 800 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது
[பக்கம் 5-ன் படம்]
ஸ்டான்லி மில்லர், 1953
[பக்கம் 7-ன் படம்]
உயிரில்லாத ரோபோட்டை உருவாக்கி புரோகிராம் செய்யவே புத்திக்கூர்மையுள்ள ஒருவர் தேவை என்றால், உயிருள்ள ஒரு செல்லை உருவாக்குவதற்கு, அதிலும் மனிதனை உருவாக்குவதற்கு...
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !