உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியைக் காட்சிப்படுத்துகிறதா? அல்லது
புற்று நோய் ஒரு வியாதி மட்டுமா?
கனவுகளுக்குள் ஆழ்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. வாழ்க்கையில் நம்மால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சங்களைக் கணகதியில் கைவசமாக்கும் வித்தை கனவுகளால் மட்டுமே சாத்தியமாகும். நான் நீங்கள் எல்லோரும் சாதாரணர்கள். உப்புக்கும் மிளகுக்கும், காதலுக்கும் காமத்திற்கும் கனவு காண்பவர்கள்
புற்று நோய் ஒரு வியாதி மட்டுமா?
கனவுகளுக்குள் ஆழ்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. வாழ்க்கையில் நம்மால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சங்களைக் கணகதியில் கைவசமாக்கும் வித்தை கனவுகளால் மட்டுமே சாத்தியமாகும். நான் நீங்கள் எல்லோரும் சாதாரணர்கள். உப்புக்கும் மிளகுக்கும், காதலுக்கும் காமத்திற்கும் கனவு காண்பவர்கள்
ஆனால் தூரநோக்கும், பரந்த நுண்ணறிவும் கொண்ட விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தையே மாற்றியமைக்கும் வீச்சுக் கொண்டவையாகும்.
விஞ்ஞானிகளின் கனவு
பல விஞ்ஞானிகளின் மனங்களை அரித்துக் கொண்டிருக்கும் கனவு ஒன்று உண்டு.
வெறிபிடித்த காளை மந்தைக்குள் புகுந்தால் என்ன நடக்கும்? சுற்றி நிற்பவற்றைக் குத்திக் குளறி இரண களமாக்கிவிடும். கனவென ஆச்சரியப்டும் விதத்தில் அந்த வெறிக் காளை திடீரெனத் தன்னையே பன்மடங்கு மீளாக்கிப் பெருகினால் மந்தையே அழிந்துவிடக் கூடிய ஆபத்துண்டு.
அதே விதமாக எமது உடலின் சில கலங்கள் (Cells) வெறிமிகுந்து கட்டுப்பாடுகளை மீறி தான்தோன்றித்தனமாக பெருகத் தொடங்குவது பேராபத்தாகும். அதுதான் புற்றுநோய். ஏன் இவ்வாறு கலங்கள் பெருகத் தொடங்குகின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளை நீண்டகாலமாக அலைக்கழிக்கிறது. அதற்கான விடைகளைத் தேடிக் கனவுகளும் காண்கிறார்கள்
நோய்க் கலங்களை அழிப்பதின் மூலமே அந் நோயைக் குணப்படுத்த இன்றைய மருத்துவம் முயல்கிறது.
மிகவும் பரிச்சயமான உதாரணம் சொல்லலாம்.
ஒரு சில பயங்கரவாதிகளைக் கொல்ல கண்மூடித்தனமாக பீரங்கி குண்டுகளை வீசுவது எப்படியோ அவ்வாறே புற்றுநோய்க் கலங்களைப் பூண்டோடு அழிக்க ரேடியோதெரப்பி, கீமொதெரிபி, என முயல்கையில் ஆரோக்கியமான கலங்கள் பலவும் அழிந்தொழிகின்றன.
இதனால்தான் புற்றுநோய்க்கான சிகிச்சையானது ஈன இரக்கமற்ற கொடுங்கோல் மன்னனின் மறைவான செயற்திட்டங்கள் போல பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
பல தசாப்த ஆராச்சிகளின் பயனாக புற்றுநோய் தொடர்பான சில விடயங்கள் தெரிய வருகின்றன.
புற்றுநோய்க்கான துணை நிரைல் கூறு
புற்றுநோய்க்கான துணை நிரைல் கூறு (subroutine) எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கிறது. செயலாற்றல் மிக்க அதுதான், கதிர்வீச்சு, இரசாயனங்கள், அழற்சி, கிருமித் தொற்று போன்றவற்றால் ஊறு ஏற்படும்போது கலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
பூமியில் உயிரனங்களின் வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கும்போது அவற்றின் கட்டுமானத்தில் புற்றுநோய்க்கான வாய்ப்பு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்கிறார்கள்.
மறைவாக இருப்பது சரியான தருணத்தில் சரியான சமிக்கை கிடக்கும்போது தூண்டப்பட்டு துரிதமாகச் செயற்பட ஆரம்பிக்கும்போது புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறார்கள்.
எனவே இது ஒரு நவீன பிறள்வு (modern aberration)அல்ல. பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாகவே நடக்கிறது. இது மனிதர்களில் மட்டும் வருவதில்லை. ஏனைய பாலுட்டிகளிலும், மீன்கள், ஊர்வன ஏன் தாவரங்களில் கூட வருகின்றன.
புற்றுநோய் தோன்றுவதற்கான சில மரபணுக்கள்; பல மில்லியன் வயதுடையவை என விஞ்ஞானிகள் கருதுகிறார்;கள்.
பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? எவ்வாறு படிப்படியாக இன்றுள்ள நிலையை எய்தின? இது பற்றிய பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும்போது உயிரனங்களின் பரிணாம மாற்றத்தில் நடைபெற்ற இரு விடயங்கள் மிக முக்கியமானவையாகும்.
சுமார் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே சாதாரண சிறிய கலங்களிலிருந்து சிக்கலான பெரிய கலங்கள் உருவாகின. அத்தகைய கலங்களின் செயற்பாட்டிற்கு அதிக சக்தி தேவை. அவ்வாறான சக்தியைக் கொடுப்பதற்கு மைற்ரோகொன்றியா (அவைழஉhழனெசயை) வந்தது. புராதன பக்றீரியாக்களின் எச்சங்கள்தான் மைற்ரோகொன்றியா என்று கருதுகிறார்கள்.
நச்சு ஒட்சிசன்
ஒரு முக்கியமான கருத்து உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்று நாம் உயிர் வாயு எனக் கொண்டாடும் ஒட்சிசனானது ஆரம்ப காலத்து தனிக்கல உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையான வாய்வாக இருந்தது. ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தியாகி வளியில் செறிந்து கிடந்த இந்த ஒட்சிசனானது அன்றைய உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
இதிலிருந்து தப்ப அவற்றிற்கு இரண்டே இரண்டு வழிகளே இருந்தன.
இதிலிருந்து தப்ப அவற்றிற்கு இரண்டே இரண்டு வழிகளே இருந்தன.
- ஒட்சிசன் தேங்குவதைத் தடுப்பதற்கான வழிகளைத் தேடுவதும், நச்சுத்தன்மை வாய்ந்த ஒட்சிசனால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதும் முதலாவதாகும்.
- மற்ற வழி மிகவும் சாதுர்யமானது. நச்சு எனப்படும் அந்த ஒட்சிசனையே தனக்கு சக்தியை வழங்குவதற்கு ஏற்ப தான் மாற்றமுறுவதாகும.; இதற்கும் உதவியது அந்த மைற்ரோகொன்றியா தான்.
இன்றைய உயிரனங்களில் மைற்ரோகொன்றியாதான் நச்சு ஒட்சிசனைத் கலங்களுக்கு சக்தியைத் தருவதற்கான பணியை செய்கிறது.
அபரிதமாகக் கிடைத்த ஓட்சிசனை முடாக் குடியன் போலக் குடிக்க வல்ல கலங்கள் உருவாகிய மாற்றமானது கூர்ப்பின் அடுத்த நிலைக்கு உயிரினங்களை கொண்டு சென்றது. இந்த இரண்டாவது மாற்றம்தான் மிக முக்கிமானது. உயிரனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, புற்றுநோய் பற்றிய புரிதலுக்கும் மிகவும் முக்கிமானதாகும். அதாவது இதுவரை காலமும் ஒரு கல உயிரினங்கள் மட்டுமே இருந்த பூவுலகில் முதல் முறையாக பல கலங்களை உடைய உயிரினங்கள் தோன்றின.
இது புற்றுநோய் பற்றிய ஆய்வுகளுக்கும் முக்கியமான விடயமாகும். எப்படி எனப் பார்ப்போம்.
பல கலங்களைக் கொண்ட உயிரினங்கள்
பல கலங்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றமானது வாழ்வின் அடிப்படைத் தன்மையில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியது.
ஒரு கலம் கொண்ட உயிரினங்களின் வாழ்வானது சாதாரண சுற்றுவட்டம் போன்றது. தனிக் கலங்களான அவை தம்மைத்தாமே படியெடுத்து பெருகுமே ஒழிய இனப் பெருக்கும் செய்ய வேண்டிய தேவை கிடையாது. இன்னொரு விதத்தில் சொன்னால் அவை ஆண் பெண் பேதமில்லா இறப்புமற்ற உயிரினங்களாகும்.
அங்கங்கள் உறுப்புகள் எனத் தோன்றிய பின்னர் உயிரினங்களால் தம்மைத்தாமே படியெடுப்பது முடியாத காரியமாயிற்று. தமது இனத்தின் தொடர்ச்சியை நிச்சயப்படுத்த, தமது உயிரணுக்களை அடுத்த சந்ததிக்குக் கடத்த இனப் பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
இந்த இனப் பெருக்கத்தை விந்து, முட்டை ஆகிய சிறப்பான முளைய உயிரணுக்கள் ஊடாகவே தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இறப்பு என்பது அவற்றிற்கு நியமமாயிற்று.
சில கலங்கள் சில காலத்திற்கு தம்மைத் தாமே படியெடுக்க முடிந்தாலும், அவற்றிற்கான உயிரியல் தேவை முடிந்ததும் அவற்றின் வாழ்வு முடிவுறும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவாறு இறப்பைத் தழுவிக் கொள்ளும். இதை apoptosis என்பார்கள். நிர்ணயிக்கப்பட்ட அத்தகைய இறப்பை மேலாண்மைப்படுத்துவது முற் கூறிய மைற்ரோகொன்றியாவாகும்.
புற்றுநோய் எவ்வாறு?
உயிரணுக்களுக்கும் ஏனைய கலங்களுக்கும் இடையேயான நம்பிக்கை உடன்பாட்டின் முறிவுதான் புற்றுநோய் எனலாம். கலங்களின் இறப்பை செயலிழக்கச் செய்து தம்மை அழியாத நிலைக்கு உயர்த்துவதற்காக, அளவிற்கு அதிகமாக பெருகும் முயற்சிதான் புற்றுநோய் எனச் சொல்லலாம் போலிருக்கிறது. இதனால்தான் ‘பேராசை பிடித்த கலங்களின் பெருக்கம்’ எனப் புற்றுநோயைப் பலரும் கருதினர். ஆனால் அண்மைய ஆய்வுகளின்படி புற்றுநோய் பற்றிய தவறான பார்வை அது எனச் சொல்லத் தோன்றுகிறது.
புதிய கருத்து
புற்றுநோய்க் கலங்கள் ஒட்சிசன் மிகவும் குறைந்த சூழலில் பெருகுவதில் வெற்றியடைகின்றன. இது நொதித்தல் எனப்படும் இது அநவயடிழடளைஅ தின் செயற்திறன் குறைந்த வடிவம் எனலாம். ஆதி உயிரினங்கள் அவ்வாறு செய்தன.
மூதாதையர் கடந்து வந்த சில தடங்களை உயிரினங்கள் தமது வளர்ச்சிப் பாதையில் இப்பொழுதும் பிரதிபலிக்கின்றன.
உதாரணமாக
- ஒரு சோடிக்கு மேற்பட்ட முலைகளுக்கான அடையாளங்களுடன் பல வளர்ந்த ஆண் பெண் இருபாலாரையும் காணமுடிகிறது.
- வால் போன்ற அடையாளத்துடன் அல்லது வாலுடன் பிறந்த குழந்தைகள் பற்றிய பதிவுகள் மருத்துவ உலகில் பல உள்ளன.
பரிணாம வளர்ச்சியானது முந்தைய மரபணுக்களிலிருந்தே கட்டமைக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். சில தருணங்களில் அத்தகைய பாதைகள் முடக்கப்படுகின்றன. அந்த நிலையிலேயே அடையாள முலைக் காம்புகள், அல்லது அடையாள வாலுடன் மனிதர்கள் பிறக்கிறார்கள்.
இவற்றை அடிப்படையாக வைத்தே அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் Charles Davis மற்றும்Paul Davies ஆகியோர் இணைந்து புற்றுநோய் பற்றிய ஒரு புதிய கோட்பாட்டை (Theory of cancer based on its ancient evolutionary roots)முன்வைக்கிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள்
‘புற்றுநோய் உடலில் பரவுகையில் உயிரினமானது தனது பரிணாம வளர்ச்சிப் பாதையை மீண்டும் கடக்கிறது. ஆனால் மிக மிக வேகமான கதியில் எனலாம். இயல்பான கலங்களின் ஒழுங்கு முறையைக் குலைப்பதின் மூலம் தனது மூதாதையர்களின் வாழ்க்கை முறையை மீள் நிர்மாணம் செய்ய முனைகின்றன.’
இது சில தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் கோட்பாடு. முற்றுமுழுதான முடிவல்ல.
இது சில தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் கோட்பாடு. முற்றுமுழுதான முடிவல்ல.
புற்றுநோய் பெருகுவதானது தனது மூதாதைக் கலங்களின் மரபணுக்களை மீளச் செயற்பட வைப்பது போன்றதாகும். மிகக் கடுமையான புற்றுநோயானது ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான உயிரினங்களின் வாழ்வை மீள அமைக்கிறது எனலாம்.
இருந்தபோதும், உயிரில் தேவை ஏதாவது இருந்தால் மட்டுமே புராதன ஜீன்ஸ் இப்பொழுதும் செயற்படும். உடலுக்கான அடிப்படை வரைவு போடப்பட்டு கருவானது தாயின் வயிற்றில் வளர ஆரம்பிக்கும்போது புராதன ஜீன்ஸ் அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும்.
ஆனால் அது பூர்த்தியானதும் அதன் இயக்கம் நிறுத்தப்படும். உதாரணமாக கருவிலுள்ளபோது எல்லா மனிதர்களுக்குமே வாலும் சௌவுகளும் சிறிது காலத்திற்கு இருக்கின்றன. புற்றுநோய் ஏற்படும்போது கருமுளையின் ஆரம்பநிலையில் (early stage embryonic genes) மரபணுக்களில் சில துயில்நீங்கி செயலூக்கம் பெறுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தமை இதற்குச் சான்றாகும்.
ஆனால் அது பூர்த்தியானதும் அதன் இயக்கம் நிறுத்தப்படும். உதாரணமாக கருவிலுள்ளபோது எல்லா மனிதர்களுக்குமே வாலும் சௌவுகளும் சிறிது காலத்திற்கு இருக்கின்றன. புற்றுநோய் ஏற்படும்போது கருமுளையின் ஆரம்பநிலையில் (early stage embryonic genes) மரபணுக்களில் சில துயில்நீங்கி செயலூக்கம் பெறுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தமை இதற்குச் சான்றாகும்.
உயிரினங்களின் பரிணாம உயிரியல், வளர்ச்சி உயிரியல் ஆகியவற்றின் இடையே ஆழமான இணைப்புகள் உள்ளன. இவை பற்றிய சில தெளிவுகள் ஏற்பட்டுள்ளன. புற்றுநோய்க்கான சிகிச்சையில் புதிய திசைகளைத் திறக்க இவை உதவும். மேலும் தெளிவும் பலனும் பெறுவதற்கு புற்றுநோய் பற்றிய அடிப்படை அறிவை மேலும் தேடவேண்டியுள்ளது.
புற்றுநோயின் தொடக்கம், அது பெருகும் விதம் ஆகியவற்றின் நுணுக்கங்களை மேலும் கண்டறிவதன் மூலம் பூமியில் உயிரினம் கடந்து வந்த பாதை பற்றிய அறிவைப் பெற முடியும். அதனால் புற்றுநோய் பற்றிய பயங்கள் நீங்கி மனித இனத்தில் வாழ்வு பற்றிய நம்பிக்கை வளரும்.
விஞ்ஞானிகள் தேடலுடன் கூடிய கனவுகள் காணட்டும். அதற்கான சான்றாதாரங்களை ஆய்வுகள் மூலம் கண்டறியட்டும். மரணபயம் நீங்குவதான மனிதர்களின் கனவுகள் பலிக்கட்டும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !