ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனம் ரேடியோ, டி.வி., கேமரா போன்ற மின்னணு எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிறுவனத்துக்கு ஜப்பான் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் ஆகியவை சோனி நிறுவனத்திற்கு கடும் போட்டியாக உள்ளன. இதனால் போட்டியை சமாளிக்க முடியாமல் சோனி நிறுவனம் திணறி வருகிறது.
கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் 8 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியாமல் திணறி வருகின்றன. நஷ்டத்தை ஈடுகட்ட அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளனர்.
சோனி நிறுவனம் பெர்சனல் கம்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. அந்த தயாரிப்பை முற்றிலும் நிறுத்திவிடவும் முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள பணியாளர்களில் 5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !