ஜோதிடம் பார்க்கலாம் வாங்க - nelliadynet
Headlines News :
Home » » ஜோதிடம் பார்க்கலாம் வாங்க

ஜோதிடம் பார்க்கலாம் வாங்க

Written By www.kovilnet.com on Friday, February 14, 2014 | 4:08 AM


ஜோதிடம் பார்க்கலாம் வாங்க: 

நம்மில் பலருக்கும் ஜோதிடம் பற்றி நம்பிக்கை இருக்கோ இல்லையோ நாளை என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கும். அதற்காக உங்களை ஜோசியத்தை நம்புங்கள் என்று சொல்லவில்லை. நீங்களே சொல்லுங்கள் நாம் ஜோதிடரை பார்க்கப்போனால் என்ன முதலில் சொல்வார்கள் என்றால், "தம்பி உனக்கு இப்போது காலம் சரியில்லை," என்று.

இதை நீங்களும் நானும்தான் சொல்லலாமே!!!  ஏன் என்றால் நாம் சந்தோசமாக இருக்கும் போது ஜோசியாரிடம் போகமாட்டோம்தானே? நமது  பிரச்னைக்கு வழிகேட்டு போனால் ஏழரை சனி, வியாழ மாற்றம் என்று எல்லாம் சொல்லி பயமறுத்தி விடுவார்கள். நாமும் எதாவது பிரச்சனை வந்து விட்டால் போதும், அதுக்கான தீர்வை கண்டு பிடிக்காமல் அட நம்மை ஏழரை சனியன் பிடித்து ஆட்டுகிறது என்று நினைத்து கவலைப்படுவோம்.
 

சரி இனி வருவோம் ஜோதிட மென்பொருள் பற்றி பார்க்க. தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளில்  வந்துவிட்டார். உங்களிற்கு தேவையான நேரத்தில்பயன்படுத்தலாம். தங்களின் பெயர் , பிறந்த திகதி மற்றும் பிறந்த நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் நமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப் போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற சோதிடர்களின் உதவியுடன் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்ணுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மென் பொருளை எவ்வாறு பயன்படுத்துவது?

மென்பொருளை பதிவிறக்கம்செய்யவும். இங்கே சொடுக்கவும்.
* பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.
* Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.
பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். அல்லது Right click DOWN.ttf – Click Install
* பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து ஜாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் போதும். குறிப்பிட்ட ஜாதக முழு விபரங்களும் கிடைக்கும். சரி இனி உங்கள் பலனை பார்ப்போமா.......

..
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template