பூமிக்கு அடியில் தங்கப் படிவங்கள் நிறைந்த பகுதிகளில் விளையும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளில் தங்கம் படிந்திருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம், ‘வறட்சி காலங்களில் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதற்காக பூமியின் ஆழத்திலிருந்து தங்கத்துடன் கூடிய தண்ணீரை மரங்கள் உறிஞ்சி எடுக்கின்றன.’ என்று கண்டறிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தங்கப் படிவங்கள் நிறைந்த கல்கூர்லீ பகுதியில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அந்நிறுவத்தின் விஞ்ஞானி மெல்வின் லின்டர்ன் தெரிவிக்கையில், ‘ஒரு முடியின் அளவைப் போல பத்தில் ஒரு பங்கு தங்கம்தான் இலைகளில் படிந்துள்ளன. 500 மரங்களிலிருந்து ஒரு சிறிய மோதிரம் செய்யும் அளவுக்கு தங்கம் கிடைக்கும். எனினும், இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், தங்கப் படிவங்கள் கிடைக்கும் இடங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.’ என்று தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !