சிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள் - nelliadynet
Headlines News :
Home » » சிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்

சிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்

Written By www.kovilnet.com on Friday, January 17, 2014 | 12:20 AM

புதிர் கேள்விகள்

1) ஒரு வீட்டின் முகட்டின் மீது சேவல் முட்டையிட்டால் அது எத்திசையில் விழும்?
2) இரு முதலைகள் பாதையோரமாக நடந்து சென்றன. ஒன்று பெரியது, மற்றையது சிரியது. சிறிய முதலையானது  பெரிய முதலையின் மகனாகும். ஆனால்  சிறு முதலையின் தந்தையல்ல எனின் யார் இந்த பெரிய முதலை?
3)மின்சாரத்தில் இயங்கும் புகையிரதமொன்று 100 மைல்/மணி வேகத்தில் மேற்கு திசையை நோக்கி பயணிக்கிறது. அந்த நேரத்தில் காற்று வடக்கிலிருந்து வீசும் எனில் புகை எத்திசையை நோக்கிச் செல்லும்?
4) ஓர் வீடடை விட உயரமாக பாய்வதற்கு யாரல் முடியும்?
5) இரு தந்தைகளும் இரு மகன்மாரும் மீன் பிடிக்கச் சென்றனர். ஒவ்வொருவரும் தலா ஒரு மீன் வீதம் பிடித்தனர். ஆனால் பிடிபட்ட  மொத்த மீன்கள் மூன்றாகும், அது எப்படி?
6) ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரமான குழியினுள் இருக்கக் கூடிய பொடிக் கற்களின் எண்ணிக்கை எத்தனை?
7) இரு ஆசிரியர்கள் ஒரே கல்லூரியில் கற்பிக்கின்றனர். அதில் ஒருவர் மற்றையவரின் மகனின் தந்தையாவர். இரு ஆசிரியர்களுக்கிடையான உறவு என்ன?
8) இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை இந்தியாவில் அடக்கம் செய்ய முடியுமா?
9) இடக் கையால் சுமக்கும் ஒன்றை வலக்கையால் சுமக்க முடியாது, அது எது?
விடைகள்
1) சேவல் முட்டையிடாது
2) தாய்
3) மின்சாரத்தில் இயங்கும் புகையிரததில் புகை வராது
4) எல்லோராலும் முடியும் ஏனெனில் வீட்டால் பாய முடியாது.
5) மகன், தந்தை, பாட்டன் மூவருமே மீன் பிடித்தனர்
6) பூச்சியம். குழியினுள் ஏதும் இருக்காது
7) கணவன்- மனைவி
8) முடியாது. அவர் இன்னும் உயிருடனுள்ளார்
9) இடது முன்னங்கை

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template