செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர் உட்பட 1058 பேர் தெரிவு - nelliadynet
Headlines News :
Home » » செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர் உட்பட 1058 பேர் தெரிவு

செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர் உட்பட 1058 பேர் தெரிவு

Written By www.kovilnet.com on Monday, January 6, 2014 | 5:13 AM

புதுடில்லி :  செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1,058 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் மக்கள் குடியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து 140 நாடுகளில் இருந்து 20,000 இந்தியர்கள் உட்பட சுமார் 2 இலட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் 62 இந்தியர்கள் உட்பட 1,058 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


நல்ல உடல்நலம், மன உறுதியுடன் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செவ்வாய்க் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாது. அங்கேயே மக்கள் வாழத்தகுந்த குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு தங்க வைக்கப்படுவர் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்தப் பயணம் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template