19 தாம் நூற்றாண்டு 50 ஆம் வருடங்களில் ஓரளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற உலகளாவிய கடல் ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை கண்டுபிடித்தது. அப்போதெல்லாம் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மொழியை அறிந்து கொள்வதே முக்கிய வேலையாக இருந்தது. ஆனால் அதன் பின் தான் தான் கண்டுபிடிக்கப்பட்டது இதன் இரண்டை தவிர்த்து மற்றொரு ஓசை கடலில் இருந்து வருகிறது என்று!
வித்தியாசம் ஒரு பக்கம், என்னவாக இருக்குமென்ற ஆர்வம் ஒரு பக்கம். அக்காலக்கட்டத்தில் கடல்கன்னியர்கள் ரொம்ப பிரபலம் ஏனென்றால் எப்போது தான் புதிய இடம் கண்டுபிடிப்பு வெகுஜோராக நடந்து கொண்டிருந்தது, விபத்தாகும் கப்பல்கள் கடல்கன்னியரின் வலையில் சிக்கியவர்கள் என்ற நம்பிக்கை அப்போது வெகு பிரபலம்! சரி விஞ்ஞானத்திற்கு வருவோம். கடலில் மனிதனால் வாழ முடியாது. ஏன். மீன்கள் போல் தண்ணீரில் சுவாசிக்க செதிள்கள் இல்லை. திமிங்கலம் மற்றும் டால்பின்கள் பாலூட்டிகள் என்பது மட்டுமன்று அவைகள் நீருக்கு வெளியே வந்து காற்றை வாங்கித்தான் சுவாசிக்கின்றன என்பது தனிக்கதை.
பரிணாமத்தின் பாதையில் அம்மாதிரி கடல் நீரில் இருந்து கிடைக்கும் உணவை நம்பியே வாழும் பல உயிரினங்கள் பாலூட்டிகளாக இருந்தாலும், பறவைகளாக இருந்தாலும் பிற்காலத்தில் கடலுகுள்ளேயே வாழ்கையை கழிக்க நேரிடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்! தவளை தண்ணீரில் வாழப்பிறந்து பின் வெளியே காற்றை சுவாசிக்க வளர்ந்து இருப்பது வாழும் பரிணாமத்தில் ஒரு அடையாளம். லங்க் பிஷ் எனப்படும் மீன் ஈரபதத்துடன் இருந்தால் போதும் மணிக்கணக்கில் உயிருடன் இருக்கும், அவையும் பரிணாமத்தின் அடையாளமே! அது ஒரு புறம் இருக்கட்டும். மீன் பிடிப்பவர்களின் பல வித்தியாச அனுபவங்களும் உண்டு, உதாரணம் அது ஏற்கனவே வேட்டை ஆடப்பட்ட மீன் ஆனால் அதில் உள்ள முட்கள் நாங்கள் யாரும் பயன்படுத்துவதில்லை என்று. இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் திமிங்கலங்கலும், டால்பீனும் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் வந்து இறப்பது. ஆம் அவைகள் நமக்கு எந்த காரணமும் வைக்காமல் அப்படித்தான் இறந்தன.
ஆச்சர்யம், வியப்பு, பயம் மட்டுமே மனிதனுக்கு மிஞ்சியது அப்போது தான் NOAA என்ற அமைப்பு `அந்த வித்தியாசமான மொழியைப்பற்றி வெளியிட்டது. வித்தியாசமான சப்தத்தை கண்ட மனிதர்கள், இன்னொரு வித்தியாசத்தையும் கண்டார்கள். அவை ஒரு சுறாவை பிடித்த போது அது சாப்பிட்டதின் எச்சம். 2005 ஆம் வருடம் சுறாவால் கடிக்கப்பட்ட ஒரு உடல் கிடைத்தது. வலையில் சிக்கிய சுறாவில் தூண்டில் போல் ஒரு காயத்துடன். சக மனிதர்கள் பயன்படுத்தாத எழும்பினால் ஆன ஈட்டி போன்ற ஆயுதம். அதன் வயிற்றில் இருந்த உடலை ஆராய்ச்சி செய்ததில் அது பாலூட்டி தான், ஆனால் சீலுக்கோ, டால்பீனுக்கோ ஒத்துவரவில்லை, அதற்கு இடுப்பெழும்புகள் இருக்கின்றன, ஆம் மனிதனுக்கு இருப்பது போலவே, அதன் நெஞ்சலும்புகள் கூட மனிதனுக்கு ஒத்து போகிறதே தவிற மற்ற உயிரினத்திற்கு இல்லை! http://animal.discovery.com/tv/monster-week/mermaids/gallery.html படங்கள் நிறைய உள்ளன, வரிசையாக பார்க்க!
எகிப்தில் உள்ள ஒரு குகையில் கடல் மனிதர்கள் வேட்டையாடுவது போன்ற ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது, படைப்புவாத கொள்கை உடைய எந்த மதத்திலும் அப்படி ஒன்று குறிப்பிடபடவில்லை என்பதால் மறைக்கப்பட்டது, இப்படி பல உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கலாம், மனிதன் மதத்தை காட்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறானே! கடல்மனிதர்கள், கடலிலே பரிணமித்தவர்களா அல்லது கடல்பசு போன்ற விலங்கை தான் மக்கள் கடல் மனிதர்களாக பார்க்கிறார்களா என்ற கேள்வியும் அவ்வபோது வரும், சொல்லப்போனால் நேற்று அனிமல்ப்ளானட் பார்க்கும் வரை எனக்கே கடல் மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லை, அவர்களின் கூற்று என்னவென்றால், ஒருவேளை மனிதன் நியாண்டர்தால் யுகத்தில் எரிமலைக்கு பயந்து கடல் அருகில் வாழ்ந்து கடைசில் அவன் கடல் மனிதனாகவே ஆகிவிட்டானோ என்ற சந்தேகமும் உண்டு. அதற்கான வாய்ப்புகளும் அதிகம், இன்று ஒரு குழந்தை நீருக்கடியில் இருப்பதை விட சராசரி மனிதன் மூச்சை கட்டும் நேரம் குறைவு என்பது தெரிந்தது.
முதலை, நீர்யானை போன்ற தரையில் வாழும் விலங்குகள் கூட நீரில் அதிக நேரம் சுவாசிக்காமல் வாழ முடிகிறது!, நீரில் இருந்து தொடங்கிய உயிரினம் நீருக்குள்ளயே பரிணமித்து கடல்மனிதர்கள் ஆனார்களோ என்ற சந்தேகமும் உண்டு!, அதற்கு சாத்தியம் குறைவு என்பதால் நாம் எப்படி அதிகபட்ச சாத்தியகூறுகளையே உண்மையாக நம்புகிறோமோ அதன் படி நியாண்டர்தால் மனிதர்கள் கடல்மனிதர்களாக வாய்ப்பிருப்பதாக நம்ப வேண்டியிருக்கிறது! கடலில் இருந்து தரைக்கு வந்த உயிரினம் மீண்டும் கடலுக்கு போய் வாழ்வது பெரிய கஷ்டமில்லை தான் ஆனால் நீர்வாழ் உயிரினங்களுக்கு செதில்களும், தரைவாழ் உயிரினங்களுக்கு நுரையீரலும் தான் பிரதானம், பரிணாமத்தின் அடையாளமாக டால்பீன்கள் அட அதைக்கூட விடுங்க, தலைப்பிரட்டையாக மீன் போல நீரில் வாழ்ந்து பின் தவளையாக தரையில் வாழும் தவளை மிகப்பெரிய அடையாளம் இல்லையா!
மிக மிக நீண்ட காலம் கழித்து பதிவை எழுதுகிறேன், ரொம்ப முக்கிய காரணமே 2005 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆதாரங்கள் மதக்குழுவினரால் மறைக்கப்பட்டது என்பது தான், தொடர்சியோ, முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கலாம். படைப்புவாத கொள்கையினர் ஒரு கண்டுபிடிப்பை மறைக்க எடுக்கும் முயற்சி மனிதவள மேன்பாட்டில் இல்லையே என்ற வருத்தம். அதற்குண்டான லிங்கை தர்றேன். அல்லது பின்னூட்டத்தில் பதில்கள் தர்றேன். சத்தியமா புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு எழுதுறவன் மனநிலையில் இருக்கேன்! வருத்தமும், மன்னிப்புடன்!
http://animal.discovery.com/tv-shows/other/videos/mermaids.htm
http://en.wikipedia.org/wiki/Mermaids:_The_Body_Found
மேலுள்ள லிங்கில் அனைத்து விபரங்களும் உள்ளன. கண்டுபிடித்த அமைப்பின் பெயர்
http://www.noaa.gov
மேலும் விபரமறிய
https://www.google.co.in/search?q=mermaid+body+found&aq=f&sugexp=chrome,mod=5&sourceid=chrome&ie=UTF-8
http://en.wikipedia.org/wiki/Mermaids:_The_Body_Found
மேலுள்ள லிங்கில் அனைத்து விபரங்களும் உள்ளன. கண்டுபிடித்த அமைப்பின் பெயர்
http://www.noaa.gov
மேலும் விபரமறிய
https://www.google.co.in/search?q=mermaid+body+found&aq=f&sugexp=chrome,mod=5&sourceid=chrome&ie=UTF-8
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !