தக்காளியும் உருளைக்கிழங்கும் விளையும் தாவரமொன்றை விற்பனை செய்யும் நடவடிக்கையை பிரித்தானிய நிறுவனமொன்று ஆரம்பித்துள்ளது. தக்காளி (tomato), உருளைக்கிழங்கு (potato) தாவரங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்தாவரத்துக்கு TomTato என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 500 தக்காளிக்காய்களும் கணிசமானளவு உருளைக்கிழங்கும் இந்த செடியில் விளையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருப்பதால் தக்காளி, உருளைக்கிழங்கு தாவரங்களை இணைத்து ஒரே செடியாக்குவது சுலபமானது எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஆர்வம் கொண்ட விவசாயிகள், வீட்டுத் தோட்டச்செய்கையாளர்கள் சிலர் இத்தகைய செடிகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் தொம்ஸன் அன்ட் மோர்கன் எனும் நிறுவனம் இத்தகைய தாவரங்களை வர்த்தக ரீதியில் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
சாடியில் வைக்கப்பட்ட 9 சென்றி மீற்றர் உயரமான தாவரம் 14.99 ஸ்ரேலிங் பவுண்களுக்கு (சுமார் 3100 ரூபா) விற்கப்படுகிறது. இதை வீட்டில் வளர்த்து தக்காளிகளையும் உருளைக்கிழங்குளையும் அறுவடை செய்யலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !