உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானதாக காணப்படும் நீரில் உள்ள மாசுக்களால் பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயங்கள் அதிகம் உள்ளன.
இதற்காக நீரை வடிகட்டி அருந்தும் பழக்கம் தற்கால மக்களிடையே விரைவாகப் பரவி வருவதுடன் இதற்கென பல்வேறு கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக NDūR Survival Straw எனும் நவீன கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஏனைய வடிகட்டும் கருவிகளைப் போன்று அல்லாமல் நீரை அருந்தும் வேளையில் உடனுக்குடன் வடிகட்டி தூய நீரை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கருவியானது 99.9999 வீதம் நோய் விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்தான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருவதுடன் இதன் விலையானது 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !