சூழலை பாதுகாக்க அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம் - nelliadynet
Headlines News :
Home » » சூழலை பாதுகாக்க அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

சூழலை பாதுகாக்க அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

Written By www.kovilnet.com on Sunday, June 2, 2013 | 1:58 AM


grey-to-green-paving-slabs






அதிவேக மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இட நெருக்கடி அதிகரித்துக் கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்கள் நகர மயமாக்கப்படுதால் சுற்று சூழலில் உள்ள பச்சை தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் விளைவாக காற்று மண்டலத்தில் ஒட்சிசன் மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களின் சமநிலை பாதிக்கப்படுவதோடு சூழல் வெப்பநிலையும் அதிகரித்து செல்கின்றது.
இதனை தவிர்க்க தற்போது GREY TO GREEN எனப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பச்சை தாவரங்களை வளர்க்கக்கூடிய விசேட டைல்ஸ்களினை (TILES) கரோலின் பிரேமி என்ற ஆய்வாளர் உருவாக்கியுள்ளார்.
இந்த டைல்ஸ்களில் காணப்படும் துளைகளினுள் உரமூட்டப்பட்ட மணலை நிரப்பி அவற்றுள் தாவரங்களை வளர்க்க முடிவதுடன் நகரப் புறங்களில் அமைக்கப்படும் வீடுகளை சூழ இவ்வகையான டைல்ஸ்களை பதிக்க முடியும்.
இவ்வகை டைல்ஸ்கள் மூலம் சூழலை எளிமையாக பாதுகாக்கவும் முடியும் என்று இதை உருவாக்கிய கரோலின் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template