பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள் - nelliadynet
Headlines News :
Home » » பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்

பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்

Written By www.kovilnet.com on Sunday, May 5, 2013 | 5:01 AM


பூமி வெப்பமயமாவதால் நமக்கென்ன என்று நினைக்க வேண்டாம். பூமி வெப்பமயமாவதால், நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறோம்.
பூமி வெப்பமயமாவதால் தட்பவெப்ப நிலை உயருகிறது. இதனால், வரலாறு காணாத வெயில், வெயில் சதம் அடித்தது  என்ற செய்திகளை வாசித்து வருகிறோம். மழையின் பருவம் மாறி, ஓரிடத்தில் அதிகப்படியான மழை அல்லது வறட்சி போன்ற நிலை காணப்படுகிறது.
மறைமுகமாக பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து பூமியைக் காக்க தனி மனிதனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணாமல், நாமும் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சில குறிப்புகள்…
நாம் பயன்படுத்தும் வாகனத்தை சரியாக பரிமரித்து, அதிக புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பை,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
வீட்டிலோ, பக்கத்தில் இடம் இருந்தாலோ, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.
நாம் வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும், அவற்றில், ஒரு சில மரங்களையாவது நட்டுவிட்டு வரலாம்.
வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றலாம். குண்டு பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
தேவையற்ற மின் சாதன பயன்பாட்டை தடுக்கலாம். ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்கு சமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, தேவைக்கு அதிகமாக தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு உபயோகிப்போமோ அப்படி உபயோகித்தால் நாட்டுக்கு நல்லது.
கணினிகளைப் பயன்படுத்தும் போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே மானிட்டர்கள் ஆப் ஆகும் வகையில் செய்து விடுங்கள்.
அனைவரும் வீட்டில் ஒரு சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவசரத்துக்கும், தனியாக கடைக்கும் செல்ல வேண்டும் போது சைக்கிளைப் பயன்படுத்தினால், உடலுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டி இருந்தால், அதற்கு பதிலாக குறைந்த்து 5 மரக்கன்றுகளையாவது நட்டு வையுங்கள்.
சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template