சுமார் 3000 சூரியன்களை உருவாக்கக்கூடிய பிரபஞ்சத்தின் மிகவும் செழிப்பான கலக்ஸி கண்டுபிடிப்பு - nelliadynet
Headlines News :
Home » » சுமார் 3000 சூரியன்களை உருவாக்கக்கூடிய பிரபஞ்சத்தின் மிகவும் செழிப்பான கலக்ஸி கண்டுபிடிப்பு

சுமார் 3000 சூரியன்களை உருவாக்கக்கூடிய பிரபஞ்சத்தின் மிகவும் செழிப்பான கலக்ஸி கண்டுபிடிப்பு

Written By www.kovilnet.com on Saturday, May 4, 2013 | 7:11 AM


பூமியில் இருந்து சுமர் 12.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நமது பால்வெளி அண்டத்தை விட 2000 மடங்கு செழிப்பான ஒரு விண்மீன் தொகுதியை (Galaxy) வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். HFLS3 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கேலக்ஸி ஒரு வருடத்துக்கு 3000 சூரியன்களை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கேலக்ஸி எனப்படுவது நமது சூரியன்களைப் போலவும் அதை விட சிறிதாகவும் பெரிதாகவும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களையும் அவற்றைச் சுற்றிக் கோள்களையும் கொண்ட தொகுதிகள் ஆகும்.

இவை பல்வேறு வகைப் பட்டதுடன் பூமி அல்லது சூரிய குடும்பத்தில் இரு பல ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளன. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள கேலக்ஸி பால்வெளி அண்டம் (Milkyway galaxy) என அழைக்கப் படுகின்றது. பிரபஞ்சத்தில் இது போன்ற கணக்கிலடங்கா கேலக்ஸிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் தற்போது இனங்காணப்பட்ட HFLS33 கேலக்ஸியின் நாம் கண்டுகொண்டிருக்கும் தோற்றம் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து 6% வீதம் கழிந்து தோன்றிய தோற்றம் ஆகும். அதாவது பிரபஞ்சத்தின் தோன்றி தற்போது 13.7 பில்லியன் வருடங்கள் தான் ஆகின்றன என்றால் இந்த கேலக்ஸி எவ்வளவு தூரத்திலும் எவ்வளவு காலத்துக்கு முன் தோன்றியது என்பதையும் கணக்கில் இட்டால் மிகப் பெரிய வியப்பு உண்டாகும்.

இந்த கேலக்ஸி மிகச் செழிப்பாக இருப்பதனால் இதில் அமைந்துள்ள கிரகங்களில் உயிர் வாழ்க்கை காணப்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம் எனவும் ஆனால் அதை நிரூபிப்பது கடினம் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர். இதில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் சூரியனை விட 40 பில்லியன் மடங்கு அதிக திணிவு உள்ளது. மேலும் இந்த கேலக்ஸியில் அதிகளவு கார்பன் மொனொக்ஸைட்டு காணப்படுவதாகவும் வாயுக்கள் மற்றும் தூசு துணிக்கைகளுடன் சேர்த்து சூரியனை விட 100 பில்லியன் மடங்கு திணிவு அவற்றில் அமைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இதைவிட இவற்றைச் சுற்றி வானியலாளர்களை மர்மத்தில் ஆழ்த்தி வரும் கரும் பொருள் (Dark matter) மிகச் செறிந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது சிலியில் அமைந்துள்ள ALMA எனப்படும் அதிவலுவுள்ள தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி இந்த அண்டம் குறித்த மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு வானியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template