இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?' - nelliadynet
Headlines News :
Home » » இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'

இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'

Written By www.kovilnet.com on Monday, March 25, 2013 | 7:09 AM




          2012 ஆம் ஆண்டு சிறிலங்காவில் வீழ்ந்த சிறிய விண்கல் பாகங்களை (Meteorite fragments) ஆய்வு செய்த பிரிட்டனைச் சேர்ந்த வான் உயிரியலாளர்கள் (Astro biologists) அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர்.
பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணிப்பும் பிரபஞ்சத்தின் மற்றைய பாகங்களில் நாம் இதுவரை அடையாளம் கண்டிராத உயிர் வாழ்க்கை நிகழ்ந்து வருகின்றது என்ற ஊகமும் இந்தக் கண்டு பிடிப்பால் பன் மடங்கு உறுதியாகியுள்ளதாக இவ் விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

2012 டிசம்பரில் சிறிலங்காவின் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து வீழ்ந்து கொன்டிருப்பதைக் கண்ட பொது மக்கள் அதற்கடுத்த நாட்களில் கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து சிறிலங்காவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர். 

அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.

இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும்.

இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template