செவ்வாய் கிரகத்தில் மண் தோண்ட தயாராகி வருகிறது "கியூரியாசிடி' - nelliadynet
Headlines News :
Home » » செவ்வாய் கிரகத்தில் மண் தோண்ட தயாராகி வருகிறது "கியூரியாசிடி'

செவ்வாய் கிரகத்தில் மண் தோண்ட தயாராகி வருகிறது "கியூரியாசிடி'

Written By www.kovilnet.com on Monday, February 11, 2013 | 4:44 AM





வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியுள்ள, "கியூரியாசிடி ரோவர்' விண்கலம், ஆய்வுக்காக, அங்குள்ள மண் துகள்களை, தோண்டி எடுப்பதற்கு தயாராகி வருவதாக, நாசா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான, "நாசா' சார்பில், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, "கியூரியாசிடி ரோவர்' என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இது, கடந்த ஆகஸ்ட்டில், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.

இந்த விண்கலம் மேற்கொண்ட, முதல் கட்ட ஆய்வில், செவ்வாய் கிரகத்தில், நீரோடை இருந்ததற்கு ஆதாரமாக, சரளை கற்களாலான பாறைகள் காணப்படுவதை,புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது. மண் குவியல்கள் காணப்படுவது போன்ற புகைப் படங்களையும், அந்த விண்கலம், அனுப்பியிருந்தது.இந்நிலையில், "கியூரியாசிடி ரோவர்' விண்கலம், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டதற்கான முக்கிய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதன்படி, இன்னும் சில நாட்களில், அங்குள்ள மண் துகள்கள் தோண்டி எடுத்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

தோண்டி எடுக்கப்படும் மண் துகள்களை, ஆய்வு செய்வதற்காகவே, அந்த விண்கலத்தில், நவீன கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. இதுதவிர, விண்கலத்தில் உள்ள கேமராவிலும் இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு, உடனுக் குடன், நாசா தலைமை அலுவலகத்துக்கு, அனுப்பி வைக்கப்படும்.விண்கலத்தால் சேகரிக்கப்படும் மண் துகள்கள், ரசாயன மற்றும் கனிம வளம் என்ற, இரண்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

நாசா அதிகாரிகள் கூறுகையில், "ரசாயன ஆய்வின் மூலம், மனித வாழ்வுக்கு தேவையான, அடிப்படை பொருட்கள், செவ்வாய் கிரகத்தில் உள்ளனவா என்றும், கனிம வள ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தின் கடந்த கால சூழ்நிலை குறித்தும், கண்டறிய முடியும்' என்றனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template