முன்பு நினைத்தைவிடவும் ஆட்டிக் கடலின் பனிக்கட்டிகள் வேகமாக உருகிவருவதாக விஞ்ஞானிகளின் குழுவொன்று கூறுகின்றது.
ஐரோப்பிய விண்வெளி நிலையம் பயன்படுத்தும் புதிய செய்மதிகளிலிருந்து கடந்த வருடத்தில் மட்டும் 900சதுர கி.மீ. மறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றது.
இது தற்போதைய கணக்கீட்டைவிடவும் 50 வீதம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இதன் அதிகரிப்பினால் உலக வெப்பமயமாதலும் பச்சைவீட்டு விளைவினால் வாயு வெளிப்பாடும் அதிகரிக்குமென்கின்றனர்.
இந்தக் கணிப்பீடுகள் துல்லியமாக இருந்தால் ஆட்டிக் பிராந்தியம் முழுவதுமே பனியற்றுப் போய்விடும். இது எண்ணெய் அகழ்விற்கான தூண்டுதலையும் மீன்பிடி களஞ்சியங்களையும் ஏற்படுத்தும்.
இப்பகுதியின் தடிப்புப் பற்றி ஆராய 2010இல் CryoSat-2 என்ற விண்கலம் ஏவப்பட்டிருந்தது.
இதைவிடவும் பனிகளை ஆராய நீருக்குள் நீர்மூழ்கிக் கலங்களும் அனுப்பப்பட்டன. இந்த முறைகள் மூலம் 2004 இலிருந்து வடதுருவத்தைச் சுற்றிலுமுள்ள மாற்றங்களைப் படமெடுத்து வந்தன.
2004இல் அனுப்பப்பட்ட தரவுகளின்படி மத்திய ஆட்டிக்கிலுள்ள மாரிகாலப் பனியின் அளவு 17,000 சதுர கி.மீற்றராக இருந்தது இந்த வருடத்தின் மாரிகாலப்படி 14,000சதுர கி.மீற்றராக இருந்தது.
ஆனால் தாங்கள் இந்தப் பனிக்கட்டியின் தடிப்பில் என்ன நடைபெறுகின்றது என்பதுபற்றிச் சிறிதளவு பார்வை ஒன்றையே செய்துவருவதாகவும் ஆனால் உண்மையிலேயே அது குறைந்துவருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் உள்ளதென்கின்றனர் விஞ்ஞானிகள்.
டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தினரால் இம்மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !