இலங்கையின் மண் வகைகள் - nelliadynet
Headlines News :
Home » » இலங்கையின் மண் வகைகள்

இலங்கையின் மண் வகைகள்

Written By www.kovilnet.com on Saturday, April 19, 2014 | 2:14 AM

பாறைகள் சிதவடைவதால் உருவாகிய நுண்ணிய துகள்கள் மண் எனப்படுகின்றன. மண்ணின் முக்கியத்துவமானது இன்று பல வழிகளில் எடுத்துக் காட்டப்படுகின்றது. ஓர் உயிர் வாழ்வதற்கும் அதன் அன்றாட செயற்பாட்டிற்கும் பயிர்வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்குகின்றது. அதுபோல் சூழல் சுற்றுவட்ட செயற்பாட்டிலும் மண் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதனால் மண் தாவரங்களின் ஊடகமாகவும், விலங்குகளின் வீடாகவும் போசாக்கான மீழ்சுழற்சி ஒழுங்குத் தொழிற்பாடுகளுக்கு உதவியாகவும், பொறியியல் ஊடகமாகவும் தொழிற்படுகின்றது என்று கூறலாம்.

  மண் உருவாக்கமானது வானிலையாலழிதல், பக்கப்பார்வை விருத்தி ஆகிய செயன்முறைகளின மூலம் விருத்தி செய்யப்படுகின்றது. மண் உருவாக்கத்தில் தாய்ப்பாறை, காலம், காலநிலை, தரைத்தோற்றம், உயிரியல் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றனவாக உள்ளன.
  இலங்கையின் பிரதான மண் வகைகளின் விருத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய ஏதுவாக காலநிலை நிலவுகின்றது. எனவேதான் இலங்கையின் மண்வகைகளை ஆராய்ந்து அடையாளம் கண்ட  C.R. பாணபொக்கே இலங்கையின் காலநிலை வலயங்களுக்கு இணங்க மண் வகைகளை இனங்கண்டுள்ளார்.
  தேசிய மண் அளவீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் நீர்ப்பாசனத் தினைக்களத்தைச் சேர்ந்திருந்த நிலப்பயன்பாட்டுப் பிரிவு மண் அளவீடு ஒன்றினை   1960-1970களில்                                 C.R.பாணபொக்கே  தலைமையில் மேற்கொண்டது. அந்த அளவீட்டின் பிரகாரம் உலர்வலயத்திலும் ஓரளவு உலர்- இடைவலயத்திலும் 15 மண்வகைகள் அடையாளம் காணப்பட்டன. ஈரவலயத்திலும் ஓரளவு ஈர-இடைவலயத்திலும் 12 மண் வகைகள் அடையாளம் காணப்பட்டன. இவற்றை விட இலங்கையெங்கும் பரவலாக நான்கு வகையான நில அலகுகள் அடையாளம் காணப்பட்டன. ஆக மொத்தம் 31 மண் அலகுகள் இலங்கையின் மண்வகைகள் என்ற படத்தில் குறிக்கப்பட்டன.
இவ்வாறு பாணபொக்கே அவர்களால் 31 மண் அலகுகள் இலங்கை முழுவதிலும் அடையாளப்படுத்தப்பட்டன. பின்னர் 1975 களில் அவை 12 அல்லது 14 பிரதான பிரிவுகளாகப் பிரித்து நோக்கப்பட்டது. அந்தவகையில் பிரதான 14 மண் வகைகளும் அவற்றின் பண்புகள் மற்றும் முக்கியத்துவம் அல்லது அவற்றின் பயன்பாடு என்பவற்றை இங்கு நோக்கலாம்.
1. செங்கபில நிறமண்:-
  மழைவீழ்ச்சி மிகக் குறைவாகவுள்ள இலங்கையின் உலர்வலயப் பிரதேசங்களில் இது பரவிக் காணப்படுகின்றது. அதாவது வவனியா, அநுராதபுரம், பொலநறுவை, அம்பாந்தோடடடை, மொனராகலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது. இம் மண் நுண்ணிய இழையமைப்பையும், மிதமான அமித்தன்மையையும் உடையது. இது ஈரமாயிரக்கும்போது  இளகி ஒட்டும் தன்மையுடனும், காய்ந்திருக்கும்போது  இறுகிக் கடியமானதாகவும் காணப்படும். இங்கு சேனைப் பயிhச்செய்கை, நெற்செய்கை என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
 2. செம்மஞ்சள் பொட்சோலிக் மண் (செம்பூரன் ஈரக்களிமண்):-
  மத்திய மலைநாட்டின் பெரும்பகுதியையும், தென்மேல் தாழ்நிலத்தின் மேற்கயர் பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் செம்மஞ்சள் பொட்சோலிக் மண் பரந்துள்ளது. குறிப்பாக இம்மண்ணானது குருநாகல், கொழும்பு, கம்பகா, கழுத்துறை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. மென்சாய்வான மலைசார்ந்த பகுதிகளிலெ பூரண வடிதலுக்கட்பட்டும், சிவப்பு மஞ்சள் நிறத்தைக் கொண்டும் ஓரளவுக்கு நுண் இழைகளைக் கொண்டும்அ அடர்த்தியான திரவத்தைக் கொண்டும் விளங்கும் மண் இதுவாகும். இம்மண்ணில் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
3. செம்மஞ்சள் லற்றோசல் :-
  செம்மஞ்சள் லற்றோசல் மண்ணானது  புத்தளத்தின் வடகீழ் பகுதி, சில வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் என்பவற்றில் காணப்படுகின்றது. இம்மண்ணானது மிகவும் ஆழமாக பொதுவாக 6மீற்றர் ஆழத்தில் காணப்படும். இடைநிலைத் தன்மை கொண்ட இழையமைப்பையும், நன்கு நீர்வடிந்து செல்லக்கூடிய தன்மையையும் உடையது. குழாய்கிகணறுகள் மூலம் நீhப்பசனம் செய்யக்கூடிய தரைக்கீழ் நீhவளத்தைக் கொண்டுள்ளமையால் நீர்ப்பாசனத்துடன் இடம்பெறுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும்.

4. கல்சியமற்ற கபிலநிறமண்:-
  வரண்ட பிரதேச மலைச்சரிவுகள், கிழக்குத் தாழ்நிலப் பகுதிகளில் கல்சியமற்ற கபில நிறமண் காணப்படுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு, பொலநறுவையின் கிழக்குப் பகுதி, அநுராதபுரம்,  வடக்கு குருநாகல், மொனராகலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. இம்மண்னானது செங்கபில நிறமண்ணுடன் இணைந்த வகையில் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இடைத்தரமான இழையமைப்புடனும், மட்டுப்படுத்தப்பட்ட நீரை வடியவிடும் இயல்பையம் கொண்டது. செங்கபில நிறமண் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பயிhச்செய்கை நடவடிக்கைகளை இம்மண்ணிலும் மேற்கொள்ளக்கூடியதாகவிருந்தாலும், இம்மண்ணானது கூடிய நீர்ப்பாசனம், மற்றும் உர உபயோகம் என்பவற்றை வேண்டி நிற்கின்றது.
5. செங்கபிலநிற லற்றோசோலிக் மண் (செங்கபில ஈரக்களிமண்):-
  செங்கபில ஈரக்களிமண்ணானது கண்டிமேட்டுநிலம், நுவரெலியா, கல்கெதர, மாவனெல்ல, மிட்டினியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. பூரணம் முதல் மத்திமம் வரையான வடிதலக்குட்பட்ட செங்கபில நிறமான மத்திம இழைகளைக் கொண்ட அமிலச் செறிவு கொண்ட மண்இதுவாகும். பள்ளத்தாக்கின் அடிமட்டம் மதல் கன்றகள் நிலத்தோற்றம் லரை பரந்துள்ளது. இம் மண் பயிhகளில் பெருந்தோட்டப் பயிhகளான தேயிலை, இறப்பர் போன்றவற்றுடன் வேறுபல பயிர்வகைகளும் வளர்கின்றன.
6. முதிர்ச்சியில்லாக் கபிலநிறமண்:-
  முதிராக் கபிலநிறமண்ணானது மலைநாட்டின் கண்டி, மாத்தளை, மாவனெல்ல போன்ற ஈரவலய பகுதிகளிலும் , உலர்வலயத்தின்  அம்பாறையின் மேற்கு எல்லை, பதுளையின் வடகிழக்கு எல்லை போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றது. அதிக ஆழமற்ற, பூரண வடிதலுக்குட்பட்ட, கடும் கபில நிறம் முதல் மஞ்சள் கலந்த கபில நிறம் வரையான நிறமாறுபாட கொண்டதாகவும், மத்திம இழையமைப்பையும், ஓரளவுக்கு அமிலத்ன்மை வாய்ந்ததாகவம் இம் மண் விளங்குகின்றது.
 
  செங்குத்தான தேய்ந்த சாய்வகள் முதல் இன்று நிலத்தோற்றம் வரை இம்மண் பரந்தள்ளது. காட்டுவளப்பிற்கு எற்றதாகும். அத்துடன் நிhப்பாசன வசதியுடன் காய்கறிப் பயிhச்செய்கை மேற்கொள்ளலாம்.
7. அண்மைக்கால மணல் மண் (மணல்சார் றெகோசோல்ஸ்):-
  இலங்கையின் கரையோரங்களில் அண்மைக்கால மணற்படிவுகளைக் காணலாம். இவை கடலோரங்களில் மணற்குன்றுகளாகவும், கடற்கரைகளாகவும் உருப்பெறுகின்றன.  அதிகமாக யாழ்ப்பாணம் மெற்க கரையோரம், தலைமன்னார், கற்பிட்டி, மட்டக்களப்பு மதலான கரையோரங்களில் இவ்வகை மண் காணப்படுகின்றது. இம் மண் மிகவும் ஆழமானதாகும் அதாவத 3 மீற்றருக்கு மேற்பட்ட தடிப்பையுடையதாகும். வெள்ளை நிறத்துடனும், தனி மணியுருத் தன்மையான இழையமைப்புடனும் காணப்படுகின்றது. நீர் வடிந்த செல்லும் தன்மை அதிகமாகக் இம் மண் கொண்டுள்ளது.. வரண்ட வலயத்தில் மரமுந்திரிகைப் பயிhச்செய்கைக்கும், ஈரவலயங்களில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றது.
8. வண்டல் மண்:-
  நீரினால் அரித்துக் காவி வரப்பட்ட அடையல்களானது நதிப்பள்ளதாக்குகள், நதி வடிநிலங்கள் என்பவற்றில் வண்டல் மண்ணாகப் படிந்துள்ளன. மண் இழையமைப்பானது மணல் தன்மை முதற்கொண்டு களித்தன்மை வரையில் காணப்படுகின்றது. மண்ணின் நிறமானது வெள்ளை, செங்கபிலம், சாம்பல், கறுப்பு எனப் பலவாகும். அத்துடன் இம்மண்ணின் நீhவடிந்து செல்லும் தன்மை அதிகளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

  நீர் அதிகம் வடிந்து செல்லாத களித்தன்மை கொண்ட மண் நெற் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும். மென்மையான இழையமைப்பைக் கொண்ட மண் உப உணவுப் யிhச்செய்கைக்கு உகந்ததாகவம் காணப்படுகின்றது.
9. கருமண்(கிரமுசோல்ஸ்):-
 இது கரும் பருத்தி மண் எனவும்  கிரமுசோல்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்வகை மண்ணானது முருங்கன், கெட்டிபொல(மாத்தறை), அம்பேவில(ரத்னபுரி) போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது. இது பருத்திப் பயிhச்செய்கைக்கும், நெற்பயிhச்செய்கைக்கும் ஏற்றது.
10. உவர்நிலமண்(சொலோடைஸ் சொலோநெற்ஸ்):-
  சொலோடைஸ் சொலோநெற்ஸ் எனப்படும் உவர்நில மண் வகைகளைக் கரையோரக் களப்புக்களையடுத்துக் காணலாம்.  குறிப்பாக மகாவலி பி பிரதேசத்தின் கிழக்கு மற்றும் உள்ளக சமவெளிகள் (கண்டக்காடு – திரிகோணமடு) போன்ற பகுதிகளிலும் ஆணையிறவு, பூநகரி போன்ற பகுதிகளிலும் காணலாம்.  கபில நிறத்திலிருந்து கடும் கபில நிறம் வரை காணப்படுகின்றது. மண்ணின் இழையமைப்பு கரடு முரடானதாக இல்லாமலும் அமிலத்தன்மை குறைந்த மண்ணாகவும் காணப்படுகின்றது. இது காரத்தன்மையுடையதாயினும் இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தி நெற்பயிhச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
11. சதுப்பு நில மண்:-
சதுப்பு நில மண்ணானது கரையோரம் சார்ந்த நீர் தேங்கிநிற்கும் சேற்றுப் பாங்கான பகுதிகளில் குறைந்தளவு வடிதலுக்குட்பட்ட இம்மண் காணப்படுகின்றது.  குறிப்பாக கொழும்பு, கழுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் உள்ள சதுப்ப நிலங்களில் காணப்படுகின்றது. குறைந்தளவு வடிதலுக்குட்பட்ட மண் மேற்பரப்பப் படையானது கடும் கபில நிறம் முதல் கறுப்பு சேதனப் பொருட்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இம்மண் நெல் மற்றும் நாணற்புல் உற்பத்திக்கு பொருத்தமானதாகும்.
12. செம்மஞ்சள் மண்மீதுள்ள லற்றோசோல் மணல்சார்ந்த மண்:-
  இவ்வகை மண்ணானது மாதம்பை, நீர்கொழும்பு ஆகிய தாழ்நில ஈரவலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.
13. கைவிடப்பட்ட நீர் நிலைகளில் படிந்துள்ள கியுமிக் மண்:-
  இவ்வகை மண்ணானது ஈரவலயத்திலும் உலர்வலயத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக மத்தியமலைநாட்டின் கிழக்குப் பகுதிகளில் இது காணப்படுகின்றது. கைவிடப்பட்ட நீர்நிலைகளில் இவ்வகை கியுமிக் மண்கள் படிந்துள்ளன.
14. கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல்:-
  கல்சியம் நிநை;த செம்மஞ்சள் லற்றோசல் மண்ணனாது பெரிதும் செம்மஞ்சள் லற்றோசல் மண்வகையை ஒத்தாகும். இருப்பினும் இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல் மண்ணானது ஒரு சில சென்ரி மீற்றர்கள் தொடக்கம் பல மீற்றர்கள் வரையில் ஆழத்தில் வேறுபடுகின்ற  சுண்ணாம்புக் கற்களை அடியில் கொண்டுள்ளமையே ஆகும். நீர்ப்பாசனம் செய்யப்படுகின்ற உப உணவுப் பயிர்ச்செய்கைக்கு இம்மண் மிகவும் பொருத்தமானதாகும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template