விண்வெளிப் பயணம் செய்த முதல் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின்
|
ராபர்ட் காட்டார்டு
|
கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் மனிதன் வானூர்தியில் (aeroplane) வான் வெளியில் பறக்கலாம் என்று அறிவியலார் சொன்னதைக் கேட்டு மக்கள் கேலியாக நகைத்தனர்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மனிதன் விண்வெளிக் கலனில்(Rocket) அண்ட வெளியில் பயணம் செய்யலாம் என்று கூறியதைக் கேட்டு முன்போலவே சிரித்தனர். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்ற அண்டவெளிப்பயண (space travel) நிகழ்ச்சிகள், அது இயலக் கூடியதே என தெரிவித்தன.
ராக்கெட்டுகள் (Rockets)
1926 இல் ராபர்ட் காட்டார்டு (Robert Goddard)ராக்கெட்டை இயக்கினார். அது 12.5 மீட்டர் உயரத்திற்குப் பயணம் செய்தது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் பயன்படுத்திய R-4 என்று கூறப்படும் ஏவுகணையே(missile) முதல் பெரிய ராக்கெட் ஆகும். 1945 இல் ரஷ்யர்கள் 32 தனித்தனி எஞ்சின்களைப் பொருத்தி அதுவரை செய்யப்படாத மிகப்பெரிய ராக்கெட்டை உருவாக்கினர். அதன் விளைவாக ஸ்புட்னிக் மி என்னும் செயற்கைக் கோள் 1957 இல் உலகைச் சுற்றி வந்தது.
வான் வெளியில் முதல் மனிதன்
ரஷ்யர்கள் விரைந்து முதல் மனிதனை வான்வெளியில் அனுப்பத் திட்டமிட்டனர். விண்வெளிப் பயணத்தில் மனிதனை அனுப்ப பெரிய ராக்கெட்டுகள் தேவைப்பட்டன. பயணம் செய்வோருக்கு உயிர் - காப்பு சாதனங்கள் (life-support system) வடிவமைக்கப்பட்டன. அந்த காப்புறையில் ஆக்சிஜனோ (அ) ஆக்சிஜன் + ஈலியம் கலந்த காற்றோ அளிக்கப்பட்டது.
ரஷ்ய விண்வெளி வீரர்கள் காஸ்மொனாட்ஸ் (Consmonauts) என்று அழைக்கப்பட்டனர். மேஜர் யூரி ககாரின் (Major yuri Gagarin) (1934--68) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் 1961 இல் ஏப்ரல் 12ஆம் நாள் வாஸ்டாக் - மி என்ற விண்கலத்தில் உலகை ஒரு முறை சுற்றி வந்தார். 108 நிமிடங்களில் அப்பயணம் முடிந்தது. அந்த விண்கலம் பூமியிலிருந்து இயக்கப்பட்டது.
- மு.நீ.சிவராசன்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !