அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின. கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது.
சில துணை கோள்கள் மோதியதால் சந்திரனில் வெடிப்பு ஏற்பட்டு, இந்த திடக்கழிவுகள் படிந்திருக்கக்கூடும் என இதை ஆய்வு செய்த குழுவின் தலைவர் மரியா ஜுபேர் கூறியுள்ளார். இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்துள்ளது.
தற்போது சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றிவரும், சிறிய 2 விண்வெளி ஓடங்களின் இயக்கமும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 17ம் திகதி மாலை இந்த விண்வெளி ஓடங்கள், ஒன்றன் பின் ஒன்றாக சந்திரனில் மோதி வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது.
மணிக்கு 6,120 கி.மீ. வேகத்தில் இவை சந்திரன் மீது மோதும். இந்த நேரத்தில் நிலவின் மேற்பரப்பு இருட்டாக இருக்கும் என்பதால், இந்த மோதலை படம் பிடிக்க இயலாது. இவற்றின் எரிபொருளும் தீர்ந்துப்போய் விட்டதால், இந்த மோதலின் போது தீப்பிழம்பு எதுவும் தோன்றாது.
எனவே பூமியில் இருந்து இந்த மோதலை காண முடியாது. எனினும் மோதலுக்கு பின்னர், என்ன நடந்தது என்பதை நிலவை கண்காணித்து வரும் நாசாவின் விண்வெளி நிலையம் மதிப்பீடு செய்து படங்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !