காபன் சுற்றும் உலக வெப்பமாதலும். - nelliadynet
Headlines News :
Home » » காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்.

காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்.

Written By www.kovilnet.com on Thursday, January 3, 2013 | 5:23 AM



உலகில் இருக்கக்கூடிய உயிர்கள் அனைதிலும் காபன் அடங்கியுள்ளது. உலகம் தொடங்கிய காலத்திலிருந்து காபன் தொடர்ச்சியான ஒரு வட்டத்தில் உயிரினங்களாகவும் வாயுவாகவும் சடப்பொருளாகவும் அழிவற்று ஒரு சுற்றிற்குள் இருந்துவருகின்றது. காபனின் இருப்பினை நிலம் (biosphere) , நீர்(water) , ஆகாயம்(atmosphere) , நிலத்த்தின் கீழ் (geosphere)என நான்கு பகுப்பில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. நிலத்தில் மேல் வாழும் உயிரினங்களிலும் , வாயுவாக வளிமண்டலத்திலும் , நீரில் வாழு உயிரினங்களிலும் அதனைச் சூழ்ந்தும் , நிலத்தின் அடியில் பல சேர்வையாகவும் கனிமமாகவும் காபன் உள்ளது. மேற்படி பல நிலைகளிலும் உள்ள காபன் மூலகம் தொடர் சுற்றில் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு அழிவின்றி தாவி வருவதனை காபன் சுற்று (carbon cycle) என அழைக்கப் படுகின்றது.
பல கோடி வருடமாகவிருந்த இயற்கையான காபன் சுற்றினை தற்கால மனித குலம் சீர்குலைத்து விட்டதாக விஞ்ஞானிகளால் குற்றம் சாட்டப்படுகின்றது. அதாவது பல மில்லியன் வருடங்களில் உருவாகிய பெற்றோலியம் , நிலக்கரி என்பவற்றின் அதிகரித்த உபயோகம் காரணமாக உருவாகிவிட்ட அதீத காபன் வெளிப்பாடு காரணமாக இயற்கையாக இருந்து வந்த சுற்றுச் சுழற்சி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது சுட்டிக்காட்டப் படுகின்றது. 
பூமியினை சுற்றி வளிமண்டலத்திலுள்ள காபன் படலம் ஒரு போர்வையாக பூமியினை சுற்றியுள்ளது. இந்த போர்வையூடு பூமியின் மேற்பரப்பு வெப்பம் கடத்தப்பட்ட போதிலும் மேற்படி காபனின் அசாதாரண அதிகரிப்பு காரணமாக இந்த போர்வை தடிப்பாகி வருவதனால் பூமியின் நிலப்பகுதியில் காணப்படும் வெப்பம் மேல்நோக்கி தப்பிப் போவது தடுக்கப்பட்டு வருகின்றது. இப்படியாக மேல் நோக்கிய பூமியின் வெப்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ளடக்கப் படுவது காரணமாக சூழல் வெப்பமாவதாக (Global Warming) கண்டறியப்பட்டுள்ளது. இன்றய காலத்தில் இந்த உலக வெப்பமாதல்(Global Warming) விடையம் தற்போது தினமும் பேசப்படும் நிகழ்வாகும் அளவிற்கு நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது பாதிப்பின் தன்மையை எடுத்து விளக்கவல்லது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template