பூமி மீது மோதுமா 'அபோபிஸ்' விண் கல் - nelliadynet
Headlines News :
Home » » பூமி மீது மோதுமா 'அபோபிஸ்' விண் கல்

பூமி மீது மோதுமா 'அபோபிஸ்' விண் கல்

Written By www.kovilnet.com on Thursday, January 10, 2013 | 5:15 AM



வாஷிங்டன்: 2036ம் ஆண்டில் பூமியின் மீது 200 மீட்டர் விட்டம் கொண்ட 'அபோபிஸ்' என்ற விண் கல் மோத வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2012 QG42 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு விண் கல் அடுத்த வாரம், 14ம் தேதி, பூமிக்கு அருகே, அதாவது 2.84 மில்லியன் கி.மீ. தூரத்தில், கடந்து செல்லவுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இதே விண் கல் பூமியிலிருந்து 26,9000 கிலோ மீட்டர் அருகே பறந்து செல்லும். அண்டவெளியின் விசாலத்தோடு ஒப்பிடுகையில் இந்த தூரம் மிக மிக நெருக்கமானதாகும். ஆனாலும் இதன் வட்டப் பாதையை வைத்துக் கணக்கிடுகையில் இது பூமியை மோத வாய்ப்பில்லை. இது ஒரு புறம் இருக்க அபோபிஸ் என்ற ஒரு விண்கல் 2036ம் ஆண்டு பூமியை மோதலாம் என்று ஒரு பிரிவு விஞ்ஞானிகளும், சூரியக் கதிர்வீச்சு இந்த விண்கல்லின் போக்கை மாற்றிவிடும், இதனால் பூமி மீது மோதாது என பெரும்பாலான விஞ்ஞானிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் 2029ம் தேதி ஏப்ரல் 13ம் தேதி பூமியிலிருந்து 38,000 கி.மீ. தூரத்தில் பறந்து செல்லவுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் அப்போது இதன் வட்டப் பாதையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதன் பிறகு 2036ம் ஆண்டில் இந்த விண்கல் மிக மிக அருகே வர வாய்ப்புள்ளது. ஆனால், இதன் சூரிய கதிர்வீச்சுகளும், 'Yarkovsky effect' எனப்படும் இயற்பியல் விதியும் சேர்ந்து அதன் பாதையையும் வேகத்தையும் அதிகரிக்க வைத்து திசை திருப்பி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த விண்கல்லின் போக்கு குறித்து அமெரிக்காவின் நாஸா மற்றும் ரஷ்யன் இன்ஸ்ட்டியூட் ஆப் அஸ்ட்ரானமி விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த விண்கல் மோதினால் பல நூறு அணு குண்டுகள் வெடித்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template