எரிபொருள் ஒருபுறம் தீர்ந்து வருகிறது. மறுபுறம் மாசு பெருகி வருகிறது. எரிபொருளின் தேவையையும் பூர்த்திசெய்து,மாசையும் கட்டுப்படுத்துகிறது ஒரு பாக்டீரியா. அதிசயமாக இருக்கிறதா! காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் மாசு பெருகி உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பெட்ரோலாக வெளியிடுகிறது இந்த பாக்டீரியா. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். சையனோபாக்டீரியம் என்ற பாக்டீரியாவில் நுண்ணுயிரியில் விஞ்ஞானிகள் செயற்கையாக சில மாற்றங்களை ஏற்படுத்தினர். இதற்காக பாக்டீரியாவில் ருபிஸ்கோ என்னும் நொதி சேர்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த பாக்டீரியாக்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து, இசோப்புட்டால்டிகைடு என்ற வாயுவாக வெளியிடுகிறது. இதை எளிமையாக மாற்றி இசோப்புட்டனால் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும். இதுவரை தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாற்றங்களைத் தாண்டி எரிபொருள் கிடைக்கும். ஆனால் இந்த பாக்டீரியா முறையில் எளிமையாக குறைந்த செலவில் சிறந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் மேலும் ஒரு சிறப்பம்சமாக, இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியை கிரகித்தும் எரிபொருளை உற்பத்தி செய்துவிடும். அதாவது சூரிய ஒளியில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து பிறகு அதை இசோப்புட்டால்டிகைடாக மாற்றும். எனவே இந்த பாக்டீரியாக்களைக் கொண்டு இரட்டை வழியில் நிறைய பெட்ரோல் தயாரிக்க முடியும். இதனால் கூடுதலான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள். மிகவும் வித்தியாசமான இந்த முறை, மாசுகளையும் கட்டுப்படுத்த உதவும் என்பதால் விரைவில் உலகம் முழுமைக்கும் பரவிவிடும் என்று எதிர்பார்க்கலாம்! |
Home »
» பெட்ரோல் தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !