நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா - nelliadynet
Headlines News :
Home » » நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா

Written By www.kovilnet.com on Monday, March 4, 2013 | 6:22 AM



இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


நாம் "இயற்கை உணர்வுசார்ந்த நிலையிலிருந்து (Nature Consciousness)" தினமும் வெகு தொலைவில் நம்மை நிறுத்தல் கூறி அயாராது உழைத்துக் கொண்டு வருகிறோம். அதற்கான சான்றுகளாக, நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக பல்கிப் பெருகி வரும், கேலிக்கை சாதனங்கள்.

ரேடியோ, ட்டி.வி, கணினி, வால்க் மேன், சிடிமேன், ஐபாட் அப்புறம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தால் வெளியில் வெயில் அடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா இல்லை எவனும் குண்டு போட்டு விட்டானா என்று கூட தெரியாத அளவிற்கு நம்மை மதி ம(ழு)யக்க வைக்கும், இயந்தரத்தனமான விளையாட்டுக்கள் வேடிக்கைகள்.

இவைகள் எல்லாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் என்ற (அவ)நம்பிக்கையிலேயே புதிது புதிதாக ஏதாவதொன்று சந்தைக்கு வர வைத்து கொண்டே இருக்கிறோம்.

இவைகளைனைத்தும், நம்மை இயற்கையிடமிருந்து வெகு தொலைவில் தொடர்பற்று இருக்க வழிகோணுவதால் நாமும் இயற்கை சார்ந்த உணர்வற்று மேலும் மேலும் தேவையற்ற தீங்குகளை இயற்கைக்கு கோப மூட்டுமளவிற்கு வழங்கிவிடுகிறோம்.

இது இப்படியாக இருக்க, நாம் சற்றே அடித்தளத்தில் நின்று உற்று நோக்கினால் உண்மை இப்படியாக எனக்குப் புலப்படுகிறது. நாம் இயற்கையை வெற்றி கொள்ளவே இது போன்ற செயல்களில் நம்மை ஆட்படுத்தி இயற்கையுடன் போரிட்டு வருகிறோம் என்பது தெரியவருகிறது.

இப் போரின் வெளிப்பாடுதான், அண்மைய காலத்து இயற்கை சீற்றங்களனைத்தும் சற்றே நின்று நிதானித்து பார்க்குமளவிற்கு. வருடந்தோறும் நம் துணைக்கண்டத்தில் பெறும் பருவ மழை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை துவம்ஷம் செய்யுமளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது, அல்லது மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. அங்கு மட்டும்தான அப்படியாயெனில், இல்லை. சற்றே நமது பார்வையை உலகமனைத்திற்கும் திருப்புவோம்.

இப்பொழுது நடந்தேறிய சுனாமிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த மாபொரும் நில நடுக்கங்கள் அதனையொட்டிய உயிர் மற்றும் பொருட் சேதங்கள். வட அமெரிக்கா நாடுகளில் அதிகரித்து வரும் சூறாவளி, புயல்கள்.

இதில் காட்ரீனா என்றழைக்கப்படும் அண்மைய சூறாவளி அமெரிக்கா நாட்டையே இயற்கை சார்ந்த உணர்வுநிலைக்கு திருப்பி கொணர்ந்தது என்றால் அது மிகையாகது.

அந்த உணர்வு நிலை, முன்பெலாம் ஏதோ மூன்றாம் தர உலக நாடுகளுக்கு மட்டுமே சொந்தமென நினைந்து வந்த அப் மாபொரும் நாடு அந்த ஒரு புயலின் மூலமாக விழித்துக் கொண்டது. இயற்கை சீற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனை பொருத்து.

நீங்கள் எல்லாம் முனகுவது எனக்குத் கேக்கிறது, சரி, நேசி, அப்ப இது போன்ற இயற்கை சீரழிவுகள் முன்பு நடந்தேறியதே கிடையாது என்றா சொல்லவருகிறீர்கள என்று. சற்றே பொறுமையாக இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அக் காலத்திலும் நடந்ததுதான். ஒரு முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இது போன்ற கடுமையான வறட்சியோ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ நிலவியாதா? எனக்கு தெரிந்து இவ்வளவு மும்முரமாக பேசிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றே கருதுகிறேன்.

அப்படியெனில் என்னதான் நடந்து போனது, அன்மைய காலத்தில் என்று சற்று பார்ப்போம்.

சதுப்பு நிலக் காடுகளும் இயற்கை சீற்றமும்:
சுனாமியின் தாக்கம் நாகை ஏரியாவில் மட்டும் சற்றே அதீதப் படியான உயிர் மற்றும் பொருட் சேதங்களுடன் நடந்தேறியதை நாம் அறிவோம் அல்லவா? அதனை கண்டிப்பாக அங்கே இயற்கையிலேயே அமைந்திருந்த சதுப்பு 
நிலக்காடுகளை அழிக்காமல் வைதிருந்தால், அது ஒரு அரணைப் போல செயல் பட்டு சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி கரைக்கு வந்து சேரும் பொழுது, அதன் தாக்கம் இன்று நாம் பார்த்த அளவிற்கு இருந்துதிருக்காது.

அதுபோலவே, வளர்ந்த நாடு என்று தாவிக் குதிக்கும் அமெரிக்காவில் மட்டும் இந்த இயற்கை வளங்கள் சூரையாடப் படாமலா இருக்கிறது என்றால் அங்கும் இதே கதைதான். அங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியது, காட்ரீனா என்ற சூறாவளி.

அங்கும் இது போன்ற சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டதினால் அந்த சூறாவளியின் முழுவீச்சத்தையும் கரைபரப்பில் காண நேர்ந்தது. இன்னமும் ஒரு சுட்டரிக்கையின் மூலமாக தெரிந்த கொண்ட உண்மை ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ஏக்கர் அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதாக அது சொல்லவருகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள், இயற்கையே நமக்கு வழங்கியிருக்கும் அரண்களை விட்டொழிந்து விட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கடற்கரையோரம் மதிற்சுவர் கட்டுவது என்ன முட்டாள்தனமான அணுகுமுறை.

மக்கட் பெருக்கமும், அழிந்து வரும் பயிர் பன்முகத் தன்மையும், வனங்களும்:
1950-60களில் விவசாயத் துறையில் வந்த பசுமை புரட்சி என்கிற திட்டம் பின்னாலில் மெதுவாக தொழிற்புரட்சியாக மாறிப்போனது விவசாயத்துறையிலும், இயற்கை சார்ந்த உற்பத்தி திறனை பின்தள்ளி. இந்த புரட்சியின் காரணமாக 1950 லிருந்து 80களில், உணவு உற்பத்தி 250 சதவீதமாக உயர்ந்ததாம். சரி இப்படி நடந்து போனதில் என்ன நன்மை, தீமை என்று பார்ப்போம்.

பல்கிப் பெருகிக் கொண்டுவரும் இந்த மக்கட் தொகைக்கு பசியாற்றுகிறேன் என்ற பெயரில் இயற்கையிடமிருந்த அத்துனை செல்வங்களையும் பறித்துக் கொண்டு அவளது கருப்பையில் உள்ள சில முட்டைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றுனுள் நமது உடனடித்தேவைக்கென என்ன தேவையோ அதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளின் கருப்பையை சூரையாடி, பணப் பயிர்களாக வெளிக்கொணர்ந்து, ரசாயனங்களை மட்டுமே நம்பியே அவைகளையும் பயிரிட்டு அந்த ரசாயனங்களையும் சேர்த்து உணவுப் பொருளாக மாற்றி நாமும் உண்டு, மற்ற உயினங்களுக்கும் ஊட்டி பார்க்காத வியாதிகள் எல்லாம் பார்த்து வருகிறோம் இன்னாலில்.

இந்த பணப் பயிர்கள் தானியங்களாக குறிப்பிட்ட வகை கோதுமை, அரிசி, சோளம் etc., போன்றவைகளாகவே பயிரடப்பட்டு ஏனையெ வகை அந்த ஊரின் சீதோஷ்ன நிலைக்கே உருவான தானியங்கள் துடைத்தெடுக்கப்பட்டு அத்துடன் சேர்த்து அதனை நம்பியிருந்த பூச்சி பட்டுக்களையும் அழித்து, இயற்கை உரங்களையும் பயன் படுத்த முடியாவண்ணம் எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அழிவுப் பாதையில் இயற்கையை நடக்க வழிகோணுகிறோம், அத்துடன் இணைந்து வாழும் நம்மையும் அழித்துக் 
கொண்டுதான்.

மேற்கு மலைதொடர்கள், ஒரு காலத்தில் உள்ளே புக முடியா வண்ணமிருந்த அடர்ந்த காடுகள் இன்று ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று வர. அங்கிருந்த மழைக்காடுகள் நிறைய அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் என்ற ஒன்றை கொண்டுவந்ததின் விளைவு இன்று மழையத்துப் போய், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்றிருந்த சுற்று வட்டார ஊர்களும், மாநிலங்களும் ஏன் உலகம்தழுவிய என்று கூட கூறமுடியும் அதன் விளைவை சந்தித்து வருகிறது.

ஃபாசில் எரிபொருள் திருட்டும், இயற்கையின் பெருமூச்சும்:
இந்த ஃபாசில் எரிபொருட்கள் எங்கிருந்து வருகிறது? பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினுடே பயணித்து இன்று நமக்கு பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.

எனவே மீண்டும் ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய விசயம், இவைகள் தண்ணீரைப் போல் தோண்டத் தோண்ட ஊறி வருவது கிடையாது, ஏற்கெனவே அவ்வாறு இருப்பதை வெளியே கொண்டுவருகிறோம் அவ்வளவே. 


ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து அடி தாவர பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்துருந்தால் நாம் இன்று அழித்து தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கும். நாளை இது போல் நம் சந்ததிக்கு கிடைக்க வாய்புண்டா? விட்டுவைத்திருக்கிறோமா ஏதாவது ஒன்றை?

இதனை வெளிக்கொணர்ந்து முறையற்று பயன்படுத்துவதின் மூலம், (ஒரு அமெரிக்கனுக்கு உணவளிக்க அவருக்குகென ஆகும் எரிபொருளின் செலவு 1600 லிட்டர் பெட்ரோலியமாம் ஒரு வருடத்திற்கு) நமது தலைக்குமேல் இருக்கும் குடையாம் ஒஷொன் திரையையும் கிழித்து மற்ற விளைவுகளையும் விலை கொடுத்தல்லவா வாங்குகிறோம்.

கடல் மாசுபாடு:
எங்குதான் நாம் விட்டுவைத்தோம், கடலுக்குள்ளும் சென்று அணுக் கழிவுகளையும், கொண்டு வந்த பொட்ரோலியம் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து அல்லது அவைகள் வேண்டுமென்றே கடலில் கலக்க வைத்து அங்குள்ள மழைக்காடுகளை போன்று என்றழைக்கப்படும் "பவளப் பாறைகளின்" அழிவிற்கும் ஏனைய கடல் விலங்குகளுக்கும் அழிவினையும், ஒரு சமச்சீரற்ற நிலையில் அந்த வளம் விழ அடிகோலிடுகிறேம்.

இயற்கையின் பதிலடி நமது சுரண்டல் போருக்கு:
இப்படி பல நிலைகளில் நமது போரை இயற்கைக்கு எதிராக நடத்தி வருகிறொம். எதனை மறந்து என்றால் நாம் இயற்கையின் அங்கம் தான், நமக்காக அல்ல இயற்கை என்பதனை முழுவதுமாக மறந்து போரடுவதின் விளைவு; இயற்கை பிரிதொரு நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள, carrying capacity என்ற சமன்பாட்டை பயன்படுத்த நேரிடுகிறது, உயிரனங்களுக்கு எதிராக.

எப்படி, ஒர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட எறும்பின் பெருக்கம் அதிகமுறும் பொழுது அதனை அதற்கெதிரான ஒரு விலங்கினத்திற்கான வளரும் வாய்ப்பை இயற்கையே உற்பத்தித்து அவ் எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.

இது போன்று நமக்கும் அன்மை காலங்களில் இயற்கை இந்த யுக்தியை
 பயன்படுத்த முற்படுகிறதோ என்று எனக்கு தோன்றச் செய்கிறது. எப்படியெனில்;

அதீதத்து வரும் கணக்கற்ற மக்களின் பெருக்கமும் அதனையொத்த கண்மூடித்தனமான இயற்கை சீரழிப்பும் ஒரு வகையில் இயற்கையே முன் வந்து நம்மை கண்டிப்பதாக உள்ளதுதானோ இந்த சூறாவளி பெருமூச்சுகளும், சுனாமிகளும், பூகம்பங்களும், உடல் வியாதிகளும், வெப்ப சூடேற்றமும் இன்ன பிறவும். யோசிக்கத்தான் வைக்கிறது.

இயற்கையுடனான உணர்வு சார்ந்த நிலை (Nature Consciousness) அற்றுப் போனதே இதற்கெலாம் தலையா காரணமோ?

எனது அடுத்த பதிவில் நம்ம மதக் கடவுளர்களும் இதற்கு எப்படி பொறுப்பாளி ஆகுகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template