சுமார் இரண்டு கோடியே 50 இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு முன், பால்வெளியின் மையப் பகுதியில் அதிக நட்சத்திரங்கள் குழுமியிருந்த நிலைமை இருந்திருக்கலாம். பால்வெளியின் மையப் பகுதியின் மீது நீண்டகால ஆய்வு மேற்கொண்ட பிறகு ஜப்பானின் ஆய்வாளர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். பால்வெளியின் உருவாக்கம் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு இது துணை புரியும்.
பால்வெளியின் மையத்தில் அமைந்துள்ள கால்பந்து வடிவத்திலான கருப்பகுதியின் மீது ஆய்வு மேற்கொண்டு, முதல் வகை ஒளிர்வு மாற்றம் கொண்ட விண்மீன்களைத் தேடிப்பார்த்ததாக ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் நக்காயா பல்கலைக்கழகத்தின் கூட்டு ஆய்வுக் குழு கூறியது. ஆய்வுத் தரவுகளின் படி மேற்கூறிய முடிவை எடுத்தது என்று இது குறிப்பிட்டது.
classic Cepheid அல்லது முதல் வகை ஒளிர்வு மாற்றம் கொண்ட விணீன் என்பது கால மாற்றத்தின் படி தனது ஒளிர்வு மாறிமாறி வரும் ஒரு அரிய வகை நட்சத்திரமாகும். இவை பொதுவாக சூரியனைப் போல் நான்கு முதல் 20 மடங்கு வரை பெரியவை. வயது அதிகரிப்புடன் அதன் ஒளியளவு மாறும் சுழற்சி குறைந்துவிடும். ஆகையால், ஒளியளவு மாறும் சுழற்சி பற்றி ஆராய்ந்து அவற்றின் வயதை அறிந்து கொள்ளலாம். அதன் விளைவாக, தொடர்புடைய பிரதேசங்களிலுள்ள நட்சத்திரங்கள் உருவாகும் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முன்பு, மக்கள் பால்வெளியின் கரும் பகுதியில் இத்தகைய ஒளிர்வு மாறும் விண்மீ்ன்கள் எதையும் கண்டறியவில்லை. ஜப்பானின் ஆய்வுக் குழு அகச்சிவப்பு கதிர் மூலம் இப்பகுதியின் மீது ஆராய்ந்தது. 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான ஆய்வு மூலம், 80 ஆயிரத்துக்கு அதிகமான நட்சத்திரங்களில் அவர்கள் 3 ஒளிர்பு மாறும் விண்மீன்களைக் கண்டறிந்தனர்.
இந்த 3 விண்மீன்களின் ஒளிர்வு மாற்ற சுழற்சி சுமார் 20 நாட்களாகும். ஆகையால், அவை கிட்டத்தட்ட 2 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவை. நட்சத்திரங்களில் முதல் வகை ஒளிர்வு மாற்ற விண்மீன்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆகையால், ஒரே பகுதியில் இத்தனை முதல் வகை ஒளிர்வு மாற்ற விண்மீன்கள் பிறப்பது, ஒரே நேரத்தில் அதிக நட்சத்திரங்கள் தோன்றியதைக் குறிக்கிறது. சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலத்தில், பால்வெளியின் கரும்பகுதியில் மிக அதிக நட்சத்திரங்கள் பிறந்தன. இந்த நிலைமை அண்மை காலம் வரை தொடரக் கூடும் என்று ஆய்வாளர்கள் தரவுகளை ஆராய்ந்த பின் முடிவு எடுத்துள்ளனர்.
மேலும், அதை விட குறைவான ஒளிர்வு மாற்ற சுழற்சி கொண்ட முதல் வகை ஒளிர்வு மாற்ற விண்மீன்கள் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. தற்போதைய ஆய்வுத் திறன் படி, ஒளிர்வு மாற்ற சுழற்சி 5 நாட்களுக்கு மேலான முதல் வகை ஒளிர்வு மாற்ற விண்மீன்கள் ஆய்வாளர்கள் கண்டறிய இயலும். ஆகையால், 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலத்தில், பால்வெளியின் கரும்பகுதியில் புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகம் குறைவாகவே இருந்திருக்கும் என்று சொல்லலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !