சூரியன் ஒரு முழுக்கோளம் என்கிற நம்பிக்கை அண்மையில் தகர்க்கப்பட்டிருக்கிறது.
சூரியனின் கோளத்தன்மையை நாசா விஞ்ஞானிகள் அண்மையில் துல்லியமாக அளந்துள்ளனர். இப்படி அளவீடு செய்வதற்கு Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி பயன்பட்டுள்ளது. சூரியப் புள்ளிகள் தீவிரமாக இயங்கும் நாட்களில் சூரிய நடுக்கோட்டின் ஆரம், துருவ அச்சின் ஆரத்தைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக இருக்கிறதாம். சூரியனைச் சுற்றிலும் பழத்தோல் போன்ற ஒரு பொருள் உருவாவதால் துருவப் பகுதிகளில் நசுங்கிப்போன கோளமாக சூரியன் தோற்றமளிக்கிறதாம். சூரியனின் இடுப்பு சற்று பருத்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
இந்த "பழத்தோல் பிதுக்கம்" காரணமாக சூரியன் ஒரு முழுமையான கோளம் இல்லை என்கிற கருத்து உறுதிப்படுகிறது. சூரியனின் தீப்பிழம்புகளை ஆராய்வதற்காக 2002ல் Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி ஏவப்பட்டது. எக்ஸ் கதிர்களையும், காமா கதிர்களையும் பயன்படுத்தி இந்த விண்தொலைநோக்கி அளவீடுகளை செய்துள்ளது.
விண்மீன்களில் சூரியன் மட்டுமே மிக அதிகமான ஈர்ப்புவிசையைப் பெற்றிருக்கிறது. சூரியனின் கோள வடிவம் 0.001 சதவீதம் என்று இது நாள் வரையில் நம்பப்பட்டு வந்தது. நிமிடத்திற்கு 15 சுற்றுகள் வீதம் சுழலக்கூடிய விண்தொலைநோக்கியின் பொருளருகு துளை வழியாக சூரிய வட்டத்தையும், தீப்பிழம்புகளையும் கண்காணித்தபோது, சூரியன் முழுமையான கோளம் இல்லை என்கிற உண்மை தற்செயலாக அறியப்பட்டுள்ளது.
இந்த பழத்தோல் பிதுக்கம் காந்தப்பண்புகளைக் கொண்டதாம். சூரியப்பரப்பில் குமிழ்களாகப் படரும் இந்த மேற்பரப்பிற்கு supergranules என்று பெயரிட்டுள்ளனர். பானையில் கொதிக்கும் நீர்க்குமிழ்களைப் போன்று பிறப்பெடுக்கும் இந்த supergranules மெள்ள மெள்ள விண்மீன்களின் அளவிற்கு உருப்பெருக்கம் அடைகின்றனவாம். supergranules ன் அளவு பூமியைப்போல் இருமடங்கு என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இவை முழுக்க முழுக்க காந்தப்புல பிளாஸ்மாவால் ஆனவையாம்.
supergranules ன் மையத்தில் தோன்றும் காந்தப்புலம் மெதுவாக மேற்பரப்பை அடைகிறது. சூரியனில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்களால் g-mode எனப்படும் சூரிய ஈர்ப்பு விசையில் அலைவுகள் ஏற்படுகின்றன. சூரியனின் காந்தப்புல ஏற்றத்தாழ்வுகள், பூமியின் காந்தப்புலத்தை நிச்சயமாக பாதிக்கக்கூடியவை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !