ஜப்பானின் டோக்கியோ எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிறிய அரச கட்டடம் ஒன்றின் பின்புறமும் நிலத்துக்குக் கீழ் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள காற்பந்து மைதானம் மற்றும் பனிச்சறுக்குப் பூங்கா ஆகியவற்றின் நிலத்துக்குக் கீழ மிக ஆழமாக நிலக்கீழ் சுரங்கம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இது ஜப்பானிய பொறியியலின் மகத்தான படைப்பாகும்.
இச் சுரங்கம் எதற்காக உபயோகிக்கப் படவுள்ளது என்பது இதை விட ஆச்சரியமான ஒரு விடயமாகும். அதாவது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வாழும் சுமார் 13 மில்லியன் மக்களையும் அங்கு வருடாந்தம் ஏற்படும் சைக்கிளோன் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு எனபவற்றில் இருந்து இந்த சுரங்கம் பாதுகாக்க வல்லது.
சுமார் 4 மைல் ஆழமுள்ள இந்தச் சுரங்கம் ஐந்து மாடிக் கட்டம் ஒன்றை விட பல மடங்கு பெரியதாகும். டோக்கியோவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெள்ளம் இந்தச் சுரங்கம் வழியே வழிந்து சென்று விடும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. இப் பணிக்காக போயிங் 737 ரக விமானத்தில் பயன்படுத்தப் படும் ஜெட் எஞ்சினுக்கு சமனான எஞ்சின்கள் மூலம் இயக்கப்படும் 4 டர்பைன்கள் செயற்படுத்தப் படுகின்றன.
இந்த சுரங்கத்தின் நுழை வாயில் எப்போதும் மூடப் பட்டிருப்பதால் சாதாரண குடிமகன் ஒருவர் இதைப் பற்றி அறியாமலேயே இதன் மீது பல தடவை நடந்திருப்பார் எனக் கூறப்படுகின்றது. இச்சுரங்கம் சுமார் $ 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 1993 – 2006 காலப் பகுதியில் கட்டப்பட்டது ஆகும். ஜப்பானில் இயற்கை அன்னையின் சீற்றத்தில் இருந்து குடிமக்களைக் காப்பாற்றுவதற்கான இது போன்ற செயற்திட்டங்கள் அங்கு வசிக்கும் பொறியியலாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதுடன் வருங்காலத்திலும் இது போன்ற பல வேலைப்பாடுகளை மேற்கொள்ள உதவும் எனக் கருதப் படுகின்றது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !